Header Ads



இந்த தாய்க்கு உதவிசெய்ய விரும்புகிறீர்களா..?

(அப்துல்சலாம் யாசீம்)


கிண்ணியா,குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த எம்.ஐ.அப்துல் மனாப் என்பவரின் மனைவியான கனுன் நிஸா கடந்த 2012-12-28ம் திகதி பிரசவ சத்திரசிகிச்சையின் பின்னர் கோமா நிலையில் உள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.  சத்திரசிகிச்சை செய்த நாள் முதல் இன்று வரை வீட்டிலுள்ள சொத்துக்களையும், பிள்ளைகளின் நகைகளையும் விற்று செலவுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே தனவந்தவர்கள் உதவிகள் செய்ய விரும்பினால் 077-5734810 அஜித் என்பவரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது கிண்ணியா. மக்கள் வங்கி கிளை இலக்கம் 094-200170007339 வாப்புத்தம்பி அஜித்  என்பவரின் கணக்கிற்கோ வைப்பிலிடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஜப்னா முஸ்லிம் ஆசிரியருக்கு; தயவு செய்து அந்தக்குடும்பத்தலைவரின் அடயாளத்தை உரிய முறையில் அத்தாட்சி செய்து பதிவேற்றி அதாரத்துடனும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமளவிற்கும் அவர்களுக்குரிய உதவிகளை மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு வழிகளை அமைத்துக்கொடுக்கவும்.

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் உபதேசிப்பது !

    இப்படியான உதவி கோரல் சம்மந்தமான செய்திகளை பதிவேற்றும் போது , போட்டோக்களை பதிவேற்றும் போது வயதிற்க்கு வந்த பெண்களையும் , குடும்ப பெண் உறுப்பினர்கள் அனைவரையும் வெளிக்காட்டாமல் குடம்ப தலைவரை , அல்லது தலைவியை மாத்திரம் பதிவேற்றுவது பேணுதலாக இருக்கும் அல்லவா !

    அல்லது குடும்ப உறுப்பினர் ஆணாக இருந்தால் மாத்திரம் அவரின் போடோவை பதிவேற்றுவது சாலச்சிறந்ததாக இருக்கும் .

    மற்றும்படி உதவி கோரும் குடும்பத்தின் உதவியை பெற்றுக்கொடுக்க
    அந்த குடும்பம் இருக்கின்ற மகல்லா பள்ளிவாசலின் தலைவர்களை
    பொறுப்பாக்கி , அப்பள்ளிவாசலின் தொலை பேசி இலக்கம் , முகவரியை பதிவேற்றுவது இஸ்லாத்திற்கு பொருத்தமானது

    ReplyDelete

Powered by Blogger.