தேசிய ஷூரா - சில ஐயங்கள் !
(நாகூர் ழரீஃப்)
'தேசிய ஷூரா பேரவை பற்றிய கேள்விகளும் விடைகளும்' எனும் தலைப்பில் அஷ் ஷைக் எஸ். எச். எம். பளீல் (நளீமி) அவர்களால் சென்ற 30.05.2013 அன்று ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அக்கட்டுரையின் இறுதியில், பொதுமக்களும் தமது கருத்துக்களையும் தெரிவிக்க சந்தர்ப்பமுண்டு என்றொரு வரியும் இருந்தது. அதனால் எனது கருத்துக்களை மீண்டும் ஒரு முறை மிகச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
01 – (அரசியல் யாப்பிற்கான 13 திருத்தம் பற்றி) அரசியல் துறை விற்பன்னர்களான முஸ்லிம் அரசியல் விஞ்ஞானிகளது அபிப்பிராயங்கள் பெறப்படல் வேண்டும். இத்துறை சார்ந்தோர் சாதக பாதகங்களை நிரூபிக்கும் பட்சத்தில் அது ஷூரா சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் முடிவொன்று பெறப்படும் என்று ஒரு பந்தி சொல்கிறது.
அப்படியாயின் அரசியல் விஞ்ஞானிகள் என்று இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளவர்கள் ஷூராவிற்கு வெளியில் இருந்து செயற்படுவதாகவே தெரிகிறது. ஷூரா என்பது முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த ஓர் அமைப்பு மாத்திரமா? ஏன் அந்த அதிகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நெடு காலமாகச் செய்து வருவதைப் போன்று தொடர்ந்தும் இருக்கக் கூடாது?
02 – (1000 பாடசாலைகள் அபிவிருத்தி பற்றிப் பேசும் போது) ஷூரா சபை கூடி துறை சார்ந்தவர்களது கருத்துக்களைப் பெற்று மட்டுமே முடிவெடுக்கும்.
இங்கும் முடிவெடுக்கும் அதிகாரம் மட்டுமே ஷூரா சபை பெறுப்பேற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழு இச்சேவைகளைச் செய்து வருகிறது. பாடத் திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்ட போது, முன்னாள் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் சகோதரர் என். கச்சி முகம்மது (கல்வி வெளியீட்டுத் திணைக்களம்) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவின உதவியை நாடிய போது, இஸ்லாம் பாடத் திட்டத்தின் தரம் : 07, தரம் : 10, தரம் : 11 ஆகிய பாட நூல்கள் தொகுத்தளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் கல்விக் குழுவின் சேவையினை வளர்க்க இத்துறை சார்ந்தோர் மேலும் உதவினால் இதனை விட சிறப்பாக அமையாதா?
03 – (இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படங்கள் காடகங்கள் ) பற்றிப் பேசும் போதும், மீடியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அத்துறையில் அதிக பரீட்சயமுள்ளவர்கள் அது பற்றிய ஆய்வொன்றைச் செய்யும் படி வேண்டப்பட வேண்டும். ஆய்வின் முடிவுகளின் பின்னர் அவர்களது ஆலோசனைகளின் பேரில் தக்க நடவடிக்கைகளை ஷூரா எடுக்கும்.
இங்கும் முடிவெடுக்கும் அதிகாரத்தையே ஷூரா கொண்டுள்ளது என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஏன் அந்த அதிகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் இருந்து கழட்டி எடுக்க வேண்டும்? ஆவர்களுடன் மேற்படி மீடியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அத்துறை சார்ந்தோரை இணைத்து விட்டால் இன்னும் சிறப்பாக இக்காரியம் நடைபெறுமல்லவா?
04 – (இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார சிக்கல்கள் பற்றிப் ) பேசும் போது, இத்துறை சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கு பொருளாதார துறை சார் வல்லுனர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும் என்று ஒரு பந்தி குறிப்பிடுகிறது.
ஓவ்வொரு துறைசார்ந்தோர்களது ஆலோசனைகளையும் அறிவுறுத்தலையும் மேற்படி ஷூரா எதிர்பார்ப்பதாயின், ஜம்இய்யத்துல் உலமாவின் இஸ்லாமிய வங்கியியல் வழிகாட்டல் குழுவிடம் இப்பொறுப்பினைச் சுமத்தி மேலும் இத்துறை சார்ந்தோர்களை இணைத்துச் செயற்பட்டால் இன்னும் சிறப்பாக ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மேலோங்குமல்லவா?
05 - இவ்வாறு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டிய பல துறைகள் உள்ளன என்றும் மற்றுமொரு பந்தி பேசுகிறது.
ஆம், அத்தகைய வல்லுனர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைத்து, சகல இஸ்லாமிய அமைப்புக்களையும் சேர்த்து அதன் தலைமையில் செயற்பட்டால் என்ன?
உண்மையில் நாம் சமூக ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் உளமாற விரும்புகின்றோம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் நாம் எதிர் பார்க்கும் அல்லது முயலும் மேற்படி ஒருமைப்பாட்டினை சமூக அங்கீகாரம் பெற்றுச் சிறப்பாகத் தனது தலைமைத்துவப் பணியினைச் செய்து வரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் மேற்படி துறை சார்ந்தோர்கள் இணைவார்களாயின் மிகச் சிறந்த பலனை இச்சமூகம் பெறும் என்று நம்புகின்றோம்.
இது ஒரு தேசிய மட்டத்திலான ஷூரா என்பதால் எமது இக்கருத்தையும் ஒரு ஷூராவாகப் பார்க்குமாறும் சிந்திக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன், இது ஒரு பிரிவினைக்கான அல்லது குலப்படிக்கான துரும்பாகப் பார்க்கப்படக் கூடாது என்றும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
Yes, Sura Council experts can cooperate their talents with ACJU to strength this small Sri Lankan Muslim community as an example to others.
ReplyDeleteஷ{ரா சபை அங்கத்தவர்களே சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
ReplyDeleteநமது நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோமிட்டருக்கு ஒரு அரபு மத்ரஸாக்களென பல மத்ரஸாக்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். தப்பிள்ளை நல்ல விடயம் என்றாலும் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் அந்த மத்ரஸாக்களை இயக்க பணம் பற்றாக் குறை இதற்காக ரமழான் மாதம் வந்தால் ஊர்ஊராக கடை கடையாக மாணவர்கள் கெலன்டர்களுடன் சுற்றித்திரிகிரார்கள். எத்துனை நலம் விரும்பிகள் எத்துனை மத்ரஸாக்களுக்குத்தான் வழங்க???? மேலும் அவ்வந்த மத்ரஸாக்களில் இருந்து வெளியாகும் மாணவர்களின் திறைமையென்ன???
இதே போன்றுதான் இன்று இயக்கங்கள் எனவும், அமைப்புகள் எனவும், ஜமாஅத்துகள் எனவும், பல குழுக்கள் உருவாகியுள்ளது. அத்தனை குழுக்களுக்கும் எமது முஸ்லிம் கனவந்தர்களின் (உள்நாடு – வெளிநாடு) பணம்தான் உபயோகிக்கப்படுகின்றது. சரி அக்கனவந்தர்களும் எத்தனை அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும், ஜமாஅத்துகளுக்கும்தான் தமது பணங்களை வழங்குவது.
சரி அவ்வந்த அமைப்புகள், இயக்கங்கள்;, ஜமாஅத்துகள் அனைத்திலிருந்து வரும் பிரயோஜனத்தை பார்த்தால் குறைவாகத்தான் இருக்கின்றது. ஒரு சிலதைத் தவிர. அது போக பொது மக்களுக்கு மத்தியில் குழப்பங்களை உண்டு பண்ணவும், தத்தமது காரியாலங்களை அழகாக அமைத்துக்கொள்வதற்காகவும், அக்காரியாலங்களில் பணிபுரிகிரவர்களென தமது பெயர்களை போட்டுக்கிட்டு மாத சம்பளம் எடுப்பதற்காகவும்தான் அப்பணங்கள் உபயோகிக்கப்படுகின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
(எத்தனை விதவைகள், எத்தனை கடன்காரர்கள், எத்தனை ஏழகைள் வீடுகள் இல்லாமல், தத்தமது மேல்படிப்பை தொடர முடியாமல்…… தவிக்கின்றார்கள்.)
எனவே தான் நான் தொடர்ந்தும் கூறுகின்றேன் புதிய ஒரு அமைப்பென உருவாக்கி அதற்கென பணவசூலிக்க. காரியாலங்கள் தேட தமது கால நேரத்தை வீணாக்காமல் முஸ்லிம் கவுன்ஸில் அமைப்பு இருக்கின்றது. அதுவே எல்லா அமைப்புகள், இயக்கங்கள்;, ஜமாஅத்துகள் அனைத்தையும் உள்வாங்கியுள்ளது. எனவே இதனையே தேவையானவர்களை இணைத்துக்கொண்டு முஸ்லிம் கவுன்ஸில் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஒரு ஸ{ரா சபையாகவோ அல்லது வேரு ஒரு அமைப்பாகவோ அமைக்க முயற்ச்சித்தால் கூடிய சீக்கிரம் விடயமும் நடக்கும் முஸ்லிம்களுக்குரிய பிரச்சிணையை கதைக்கவும் முடியும். இல்லையெனில் எவ்வாரு இதனை உருவாக்குவதென கதைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். கலமும் கடண்துகொண்டே செல்லும்.
அந்த துறை சார்ந்தோர் இந்தத் துறை சார்ந்தேர் என அனைத்துத் துறை சார்ந்தோரையும் உலமா சபையுடன் இணைத்துவிட்டால் அது உலமா சபையாக இருக்குமா? அதனை உலமா சபை என்று அழைக்கலாமா? அதுவும் ஓர் சூறா சபையாகத்தானே மாறும்? அதைத்தான் இப்போதும் சூறா சபை என்ற பெயரில் அமைக்க முயற்சிக்கின்றார்கள். தனியான உலமா சபை என்பது சமகால சவால்கள் அணைத்திற்கும் தீர்வை முன்வைக்கும் ஆற்றலை கொன்டிருக்கின்றதா? அவ்வாறாகில் தற்போது உலமாக்களை உற்பத்தி செய்வதற்காக ஊர் ஊராக முளைத்துள்ள மதரசாக்களின் பாடத்திட்டங்களை முழுமையாக மீளாய்வுக்குற்படுத்தவேண்டும். வெறுமனே சிலவருடங்களை மதரசாக்களிலும் பள்ளிவாசல்களிலும் கழிப்பதால் உலமாக்கள் உருவாகிவிடமாட்டார்கள்.
ReplyDelete