சிரியா போராளிகளுக்கு அமெரிக்காவின் இரசாயன ஆயுதங்கள்
சிரியா - அலெப்போ நகரை போராளிகளிடமிருந்து கைப்பற்ற அதிபர் படை தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. இதில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 150 பேரை அதிபர் படையினர் கொன்றுவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து போராளிகளுக்கு முன்னறிவிப்பின்றி ஆயுதங்கள் வழங்கி உதவிட அதிபர் பராக் ஒபாமா முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதிபர் படை கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதால் போராளிகளுக்கு அதுபோன்று இரசாயன ஆயுதங்கள் வழங்கப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஈரானும் சிரியாவிற்கு உதவுவதால், அமெரிக்கா இந்த மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment