Header Ads



கல்முனை சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் (படங்கள்)


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி பிரதேசங்களின் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 14 பிரிவுகளை அடக்கிய சிவில் பாதுகாப்புக்குழுக்கூட்டம் 26-06-2013 கமு அல்- பஹ்றியா மகாவித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ்    நிலைய பொறுப்பதிகாரி ஏ. டப்ளியூ. ஏ. கபார் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான பொறுப்பதிகாரி வசந்த ஐ.பி., கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.ஏ.வாஹிட், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். றஸாக் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள் கிராம சேவகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இங்கு கிராம சேவகர் சார்பாக கிராம சேவகர் ஏ.ஏ. அலாவுதீன் இக்குழு உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார்.

இங்கு உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. டப்ளியூ. ஏ. கபார், கல்முனையில் பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தாலும், எமது முஸ்லிம்கள் மனிதாபிமானமற்ற முறையில் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வதாலும், சமூகம் பற்றிய அக்கறையின்மையினாலுமே இன்று குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது.  களவு, சூது, வட்டி, போன்ற இஸலாமத்தின் பார்வையில் கொடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். இதனால்தான் இன்று எமது பொருளாதாரம் கல்வி போன்ற பல விடயங்களில் பின்னோக்கிச் செல்கிறோம்.

பொலிசாருடன் இணைந்து சகல சிவில் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்களும் சிறப்பாக  செயற்பட்டு எமது சமூகங்களில் காணப்படும் குறைகளை சுட்டிக்காட்டுவதுடன், குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் முழுமனதுடன் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கிறேன். எதிர்காலத்தில் எமது இக்குழுக்களின் சிறப்புத் தொழிற்பாட்டிற்கு பல்வேறு வியூகங்களுடன் நாம் செயற்பாட்டுத்திட்டங்களை முன்வைக்க இருக்கிறோம் என்றார்.


No comments

Powered by Blogger.