Header Ads



திருகோணமலை மாகாண கல்விப்பணிமனைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்


(அப்துல்சலாம் யாசீம்)

கல்முனை கல்வி வலயத்தின் வலயங்களுக்கான ஆசிரியர் சமப்படுத்தல் இடமாற்றத்தில் மாற்றம் செய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 205 ஆசிரியர்கள் தமது செல்வாக்கினை பயன்படுத்தி சொந்த இடங்களிலே நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.

2011ம் ஆண்டு  இடமாற்றம் செய்யப்பட்ட போது கிண்ணியா.   மூதுார்  கல்குடா  மட்டக்களப்பு போன்ற வெளிமாவட்டங்களில் பணியாற்றி நிறைவு செய்து விட்டுவந்தவர்களில் 45பேர்  தமது சொந்த இடத்திற்கு நிரந்தர நியமனம் இன்றி
புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையை கண்டித்து திருகோணமலை மாகாண கல்விப்பணிமனைக்கு முன்னால் 12.06.2013 கவனயீர்ப்பு போராட்டம் ஓன்றினை நடாத்தினர். தமக்கான நீதி கோரி 45 ஆசிரியர்களின் கையொப்பம் அடங்கிய மனு ஒன்றையும் மாகாண கல்விப்பணிப்பாளரிடம் வழங்கியுள்ளளர்.



No comments

Powered by Blogger.