கலாநிதி சுக்ரியை பாராட்டி கௌரவிக்கிறது முஸ்லிம் மீடியா போரம்
(ஏ.எல். ஜுனைதீன்)
இன்ஷா அல்லாஹ் எதிவரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களை பாராட்டி கெளரவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என போரத்தின் தலவர் அல் – ஹாஜ் என்.எம் அமீன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கலாநிதி சுக்ரி அவர்கள் அறிவியல் ரீதியாகச் செய்துள்ள பங்களிப்புகளை நினைவு கூர்ந்தும் ஜாமிஆ நளீமியா கலாபீடம் மூலமாக துறை சார்ந்த ஆளுமைகளை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களைப் பாராட்டும் வகையிலுமே அவர்களைக் கெளரவிக்க தீர்மானித்துள்ளதாகவும் போரத்தின் தலைவர் அமீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் சிறப்புரையாற்றுவார் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
Post a Comment