Header Ads



முஸ்லிம்களை எதிர்க்க பொதுபல சேனாவுடன் இணையும் தமிழர்கள்..!

 (அபூ ஜன்னாஹ்)

    சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சியானது இப்பிரதேசத்திலுள்ள சிங்கள மக்களின் ஆதரவோடு அல்ல என்பதும் இது இங்குள்ள தமிழ் சகோதரர்களிடையே இருக்கும் ஒரு சில சுய நலமிக்கவர்களின் நடவடிக்கையாகும் என்பதும் கசப்பான ஒரு உண்மையாகும்.

    கல்முனையில் தமிழர்கள் சிங்களவர்கள் பறங்கியர்கள் முஸ்லிம்கள் ஆகிய இனத்தவர்கள் பரஸ்பரம் ஒற்றுமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு .ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களையும்  சிங்களவர்களையும் பொது பல சேனாவின் துணை கொண்டு குழப்பி இதில் இலாபமடையலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றும் தமிழ் சகோதரர்களிடையே உள்ள ஒரு சிறு குழுவினரின் வஞ்சகமான செயல்பாட்டு நடவடிக்கையே இதுவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    கல்முனையில் ஒரு குழப்பத்தை விரும்பி அதன் மூலம் இலாபத்தை அடைய விரும்புபவர்கள் இங்கு பொது பல சேனாவின் காரியாலயத்தைத் திறப்பதற்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள கடை அறையொன்றை வழங்க முன்வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    இது மாத்திரமல்லாமல் இவர்கள் கல்முனை நகரில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நாற் சந்தியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான எண்ணம் ஒன்றை கல்முனை சுபத்ராராம விகாரையின் விகாராதிபதியிடம் முன் வைத்ததாகவும் விகாராதிபதி இக்காரியம் உசிதமானதல்லவென்றும் அந்த எண்ணத்தைக் கைவிடுவோம் என்று அவர்களுக்கு  கூறியதாகவும் தெரியவருகின்றது.

    இது இப்படியிருக்க கல்முனையில் பொது பல சேனா பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக கல்முனை சுபத்திராராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தின தேரரிடம் வெளி ஊரிலிருந்து வருகை தந்த இரண்டு சிங்கள சகோதரர்கள் இங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த   இடத்திலிருந்த கல்முனைக்கு ஆரம்ப காலத்தில் வருகை தந்து தற்போது இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிங்கள சகோதரர் இடையே குறுக்கிட்டு “கல்முனையைப் பொறுத்த வரையில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்முனையில் முஸ்லிம்கள் எந்தப் பிரச்சிணைகளும் இன்றி அமைதியாகவேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் ஒரு சில குழுவினர் தமது காணி நிலங்கள் வளவுகள் மற்றும் நகரத்திலுள்ள கடைகள் பொதுச் சந்தையிலுள்ள கடைகள் என்பன முஸ்லிம்களால் பலாத்காரமாக பறித்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி அதற்கு நிவாரணம் பெற விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் அது தோல்வியில் முடிவடைந்ததனால் தமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு தற்போது பொது பல சேனாவை நாடிச் செல்கின்றனர் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”என்று அவர்களுக்கு எடுத்துக் கூறியதும் நம்மகமாக அறிய முடிகின்றது.

    கல்முனைப் பிரதேசத்தில் தமிழர்களின் காணி வளவுகள் மற்றும் சொத்துக்களை முஸ்லிம்கள் ஒரு போதும் பலாத்காரமாக பறித்து எடுக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுதி எழுதும் கந்தையா நொத்தார்சி ஐயா அவர்களே இருந்தார்கள். என்பது இப்பிரதேச தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும்.கந்தையா நொத்தார்சி ஐயா அவர்கள் தனது கறுப்பு நிறத்திலான மோட்டார் வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் உறுதி எழுதும் பொருட்டு முஸ்லிம் ஊர்களுக்கு வருகை தந்து கடையில் அமர்ந்து இருப்பதை எம்மில் வயது கூடியவர்கள் கண்டிருப்பார்கள்.

    இது மாத்திரமல்லாமல் 1988 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் இனக் கலவரங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன. பிரதேசத்தில் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் இரு சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் சமூகப் பெரியார்கள் ஒன்று கூடி சமாதானக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டியிருந்தது. இக் கூட்டங்களில் மறைந்த முன்னாள் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் வேல்முருகு ஐயா ஏகாம்பரம் ஐயா என பல தமிழ் சமூகத் தலைவர்கள் வருகை தந்திருப்பார்கள். இப்படியாக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஒரு சமாதானக் கூட்டத்தில் உறுதி எழுதும் கந்தையா நொத்தார்சி ஐயா அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.இக்கூட்டத்திலிருந்த முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கந்தையா நொத்தார்சி ஐயாவை பார்த்து நீங்கள்தான் இப்பிரதேசத்தில் கூடுதலாக வளவுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதி எழுதுகின்றவர்  கல்முனைப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் யாராவது தமிழர்களின் வளவுகளை பலாத்காரமாகப் பறித்து எடுத்து இருக்கின்றார்களா? இல்லை வளவுகளின் பெறுமதிக்கு பணம் கொடுக்கப்பட்டு இரு பக்கத்தாரின் சம்மதங்களோடு வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருக்கிறதா என பகிரங்கமாக இவ்விடத்தில் நீங்கள்தான் கூறவேண்டும் எனக் கேட்டபோது நான் எழுதியுள்ள எல்லா உறுதிகளும் வளவின் பெறுமதிக்குப் பணம் பெறப்பட்டே விற்கப்பட்டன. வாங்கியவர்களும் பெறுமதிக்கு பணம் கொடுத்தே வாங்கியுள்ளார்கள். எனப் பகிரங்கமாகக் கூறியதை கூட்டத்தில் இருந்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள்.

    தமிழர்களிடையேயும் முஸ்லிம்களிடையேயும் பிரச்சிணைகள் இருப்பின் அதனை இரு சமூகத்தவர்களும் ஒன்று கூடி பேசித் தீர்க்க வேண்டுமே தவிர இது போன்ற சமூகங்களைக் குழப்பிவிடும் காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதே இப்பிரதேச மக்களின் விருப்பமாகும்.


6 comments:

  1. எங்கே வினை இருக்கிறது பாத்தீர்களா? கச்சைக்குள் தான் வினை இருந்துள்ளது

    ReplyDelete
  2. இதுபோன்ற செயற்பாடுகள் கல்முனையில் மட்டுமல்ல பல இடங்களில் நடக்கின்றன என்பது நாம் ஏற்கனவே நன்கு அறிந்தும் கண்டும் காணாதவாறு இருப்பதன் காரணம் இதை பெரிது படுத்தாமல் விடுவதால் இது இல்லாமல் போய்விடட்டும் என்ற எண்ணத்தினாலேதான். இருப்பினும் இதுபோன்ற காரியங்களினால் குறிக்கோள்களை குறுக்குவழிகளில் அடைவதென்பது ஒருபோதும் சாத்தியமாகாது, உரிமைகளை வெல்வதென்பது எப்போதும் நியாயமான முறையில் இருக்கவேண்டும், தர்மங்களே வெல்லும் அதர்மங்கள் அழிந்துவிடும் என்பதற்கு கோடிக்கணக்கான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன ஆகவே சம்மந்தப்பட்டவர்கள் இதுபோன்ற காரியங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளவதன் மூலம் இரு சமுதாயங்களுக்குள் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இடைவெளியை குறைத்து ஒன்றிணைக்க முயற்சிசெய்யுங்கள் முடியாவிட்டால் உங்கள் அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து உங்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள் அதுவும் முடியாவிட்டால் நீங்கள் பிறந்ததிலேயே அர்த்தமில்லை வெட்டகப்படுங்கள் வேதனைப்படுங்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற உமது கேவலமான காரியங்களினால் ஒருபோதும் நல்லவை நடக்காது உமக்கு வரும் நல்லவைகளும் பின் தள்ளப்பட்டே போகும் ஆகவே எதற்கும் நாம் உதாரணங்களையோ நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்ட தாரளமாக இருந்தும் நன்மையை நாடி அவைகளை தவிர்த்துள்ளோம் ஆக உமக்கும் பொதுபலசேனவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

    ReplyDelete
  3. அதிலென்ன கல்முனை, பாண்டிருப்பு தாழை வெட்டுவான் சந்தியில் ஒரு சிங்களக்கிராமம் வருவது சிறந்ததாகும்.முஸ்லிம்களுக்கு இதில் ஒரு ஆட்சேபனையும் இல்லை -வரவேற்கிறோம்

    "கத்தியைக்கொடுத்து வெட்டுவாங்குவது" என்பதும்,"நமக்கு இருகண் போனாலும் பரவாயில்லை -எதிரியின் ஒருகண் போகவேண்டும் என்று நினைப்பதும் இதுவல்லவா?

    ReplyDelete
  4. கல்முனை - அம்பாறை வீதியில் அமைந்துள்ள காரைதீவு சந்தியைப்பற்றித் தெரியுமா?
    முன்னொரு காலத்தில் அதற்குப் பெயர் தைக்காவடிச் சந்தி.
    அப்போது அங்கே ஒரு சிறிய தைக்கா இருந்தது. அது சாய்ந்தமருது பெரிய பள்ளியின் பரிபாலனத்தில் இருந்து வந்தது.
    இனக் கலவரத்தின் போது எல்லா இடங்களையும்போலவே எல்லைப்புறத்தில் இருந்த இந்த வழிபாட்டுத் தலமும் தூர்ந்து போனது.
    தமிழ் இனவாத ஆயுதக் குழு ஒன்று இந்த இடத்தில் விக்கிரக வணக்கத்தை ஆரம்பிக்க முயன்றபோது அதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். விடயம் அம்பாறை அரச அதிபருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் இடத்தைப் பார்வையிட வந்தார். அவரது வருகையை முன்கூட்டியே மோப்பம் பிடித்த தமிழர் தரப்பினர் அரச அதிபரின் வருகைக்கு முந்திய இரவில் குறித்த இடத்தில் சின்னதாய் ஒரு புத்தர் சிலையை வைத்தனர். பௌத்தரான அந்த அரச அதிபரும் வந்து பார்த்து அந்த இடத்தை மும்மதத்துக்கும் உரியதாக எழுதிச் சென்றார்.
    இது அன்று நடந்தது.
    தைக்காவடிச் சந்தி காலப்போக்கில் காரைதீவுச் சந்தியாகிப் போனது.
    இப்போது அங்கு நடக்கும் புதிய கட்டுமானப் பணிகள் இனிவரும் காலத்தில் அந்தச் சந்திக்கு விகாரையடிச் சந்தி என்று பெயர் மாற்றம் வரலாம் என்று கட்டியம் கூறுகின்றன.
    தவளையும் தன்வாயால் கெடும்.
    பாடம் படிப்பது எப்போது!

    ReplyDelete
  5. பொது பல செயானவை கல்முனையில் கொண்டுவரும் வேலைத்திட்டதின் அலுவலகமாக கல்முனை தமில் பிரிவு பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது. அங்கு இருக்கும் அதிகாரிகள் சிலரே இதனை வலிநாடாதுகிறார்கள். அண்மைல் கொலும்பு சென்று பொது பல செயானவை சந்தித்தவர்களும் அவ்ர்கலே...

    ReplyDelete
  6. Hi Friends,

    காட்டிக்கொடுத்தவர்கள் நன்றாக வாழந்ததாக சரித்திரம் கிடையாது. இது எல்லோருக்கும் பொருந்தும்.

    By the way, பொதுபலசேனாவின் கூட்டத்தை இனிமேல் தடுக்க வழியில்லை எனும் நிலையில் முஸ்லீம் மக்களாகிய நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதிலே வேகத்தை விட விவேகத்தையே நம்பவேண்டும்.

    நம்மை துஸ்டன் ஒருவன் பட்டப்பெயரைக்கூறி அழைத்து கோபமூட்ட முயன்றால் நாம் கோபம் கொள்ளாமல் பொறுமையாகவிருந்து அவனை அலட்சியம் புரிவதுதான் அவனுக்குத் தோல்வியைத் தரும். மாறாக நாம் வெகுண்டால் அவனுக்கு அது வெற்றியாகி விடும். இதே உத்தியைத்தான் நாம் இப்போது கடைப்பிடிக்க வேண்டும்.

    அரசுதான் இதன் பின்புலத்திலிருந்து திட்டமிட்டுச் செயற்படுகின்றது என்பது பள்ளி செல்லும் சிறுகுழந்தை முதல் அரசாங்கத்திலே ஒட்டிக்கொண்டிருக்கும் நமது அமைச்சர் வாலாக்கள் வரை அனைவருக்குமே நன்கு தெரியும். எனவே அவர்கள் எந்த நோக்கத்திற்காக இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்களோ அது நிறைவேறாத வகையிலே நாம் பொறுமையாகவும் சாதுரியமாகவும் அமைதியாக வீடுகளிலிருந்தாலே போதுமானது. அவர்கள் படுதோல்வியடைந்து விடுவார்கள்.

    மாறாக நாம் அவர்களது கூட்டத்திற்குச் சென்று குழப்பவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ நினைத்தால்தான் அது அவர்களுக்கு பாரிய வெற்றியை வழங்கும்.

    பொறுமையே மிகப்பெரும் ஆயுதம். அலட்சியப்படுத்தலே காட்டமான பதிலடி!

    ReplyDelete

Powered by Blogger.