நிந்தவூரில் முதற்தடவையாக மின்னொளி உதைப்பந்தாட்டப்போட்டி
(சுலைமான் றாபி)
நிந்தவூர் சோண்டேர்ஸ் விளையாட்டுக்கழகம் தனது 21ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் மின்னொளி உதைப்பந்தாட்டப்போட்டியினை இன்று 28.06.2013ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்தது. சுமார் 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த உதைப்பந்தாட்டப்போட்டி நிந்தவூர் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெறும் போட்டியாகும். உதைப்பந்தாட்டத்துறையை மேலும் ஊக்கு விப்பதற்காக இந்தப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.
இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ். தகநாயக, சோண்டேர்ஸ் விளையாட்டுக்கழகதின் தலைவரும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, எஸ்.ஏ.எஸ்.எம்.றியாஸ், நிந்தவூரின் உதைப்பந்தாட்ட ஆரம்ப கால வீரர்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளிக்க மைதானம் வந்திருந்தனர்.
இந்த போட்டி பற்றிய சிறப்பு வர்ணணைகளை தமிழில் எம்.ஏ. ஜாபிர் அவர்களும் ஆங்கிலத்தில் அதிபர் ஏ.எல்.நிசாமுடீன் அவர்களும் தொகுத்து வழங்கினர். இந்தப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 07ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நாடே நாதியாற்று பொய் கிடக்கு......எங்கு பார்த்தாலும் சோனிக்கு பிரச்சினை......எங்க எப்ப ஆடி விழும் எண்டு தெரியாம கெடக்கு ...அதுக்குள்ள ஊருக்கு இரவு match பகல் match அது இது எண்டு ...இளைஞ்சர்களுக்கு இந்த நேரத்தில் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை மேடை போட்டு விடிய விடிய பேச வேண்டிய தேவை மட்டுமே உள்ளது....
ReplyDelete