மாகாணங்கள் இணைவதற்கான சரத்துக்களை நீக்க அமைச்சர் அதாஉல்லா ஆதரவு
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் ஊடக ஆலோசகர் (ஜே.எம். வஸீர்)
(2013-06-06) அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அரசியல் அமைப்பு தொடர்பாகவும், மாகாண சபைகள் தொடர்பாகவும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
அவையாவன..!
1. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து கொள்வதற்காக வழி செய்யப்பட்டிருந்த சரத்தினை மாற்றுவது அல்லது நீக்குதல் சம்பந்தமானது.
2. பாராளுமன்றத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமொன்றை உருவாக்குகின்ற போது அது மாகாண சபைகள் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில் நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதியுடன் அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கான திருத்தம் சம்பந்தமானவை.
இந்த இரண்டு அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பாக கருத்துக்களை சொல்வதற்கும், தீர்மானிப்பதற்குமாக அவ்விரு அமைச்சரவை பத்திரங்களும் அன்று பிற்போடப்பட்டிருந்தது. தவிரவும் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்குவது, எடுப்பது சம்பந்தமாக எதனையும் தீர்மானிப்பதற்காக அல்ல. மட்டுமன்றி மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கூட்டுதல் அல்லது குறைத்தல் தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் தெரிவுக் குழுவினால் ஆராயப்பட்டு இறுதித் தீர்மானம் எட்டப்படுமென ஏலவே தீர்மானிக்கப்பட்டது. மேலும் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை பத்திரங்களின் இரண்டாவது அமைச்சரவை பத்திரம் தொடர்பான விடயமும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென விடப்பட்டது.
மேலும் மாகாணங்கள் இணைந்து கொள்வதற்காக வழி செய்யப்பட்டிருந்த சரத்தினை மாற்றுவது அல்லது நீக்குதல் தொடர்பில் (2013-06-13) நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் வாக்குவாதங்கள் நடைபெற்ற வேளையில் மாகாணங்கள இணைகின்ற சரத்தை நீக்குவதர்க்கு ஆதரவாக அமைச்சர் அதாஉல்லா அவர்கள் உரத்துக் குரல் கொடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தற்காலிகமாக இணைந்திருந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும் கிழக்கு மாகாணம் இன்னுமோர் பேரினவாதத்தால் ஆழப்பட்ட அசாதாரணமான நிலையும் அமைச்சர் அதாஉல்லா மாகாணங்கள் இணைகின்ற சரத்தை நீக்குவதர்க்கு ஆதரவாக அமைச்சரவையில் செயற்பட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் கிழக்கு மாகாணத்தினை 'பிச்சைக்காரனின் புன்போன்று' தொடர்ந்து அரசியல் இலாபத்திற்கு பாவித்து வந்தவர்களுக்கு அமைச்சர் அதாஉல்லாவின் நிலைப்பாடு ஒரு பிரச்சினையாக அமையலாம். இதனை ஜீரணிக்க முடியாத அவர்கள் மாகாணங்களின் அதிகாரங்களை பிடுங்குவதற்கு அமைச்சர் அதாஉல்லா ஆதரவாக இருந்தார் என்று ஊடகங்களுக்கு கூறியிருப்பது அவர்களின் கையாளாக தண்மையாகும்.
மேலும் கிழக்கு மாகாணத்தினை 'பிச்சைக்காரனின் புன்போன்று' தொடர்ந்து அரசியல் இலாபத்திற்கு பாவித்து வந்தவர்களுக்கு அமைச்சர் அதாஉல்லாவின் நிலைப்பாடு ஒரு பிரச்சினையாக அமையலாம். இதனை ஜீரணிக்க முடியாத அவர்கள் மாகாணங்களின் அதிகாரங்களை பிடுங்குவதற்கு அமைச்சர் அதாஉல்லா ஆதரவாக இருந்தார் என்று ஊடகங்களுக்கு கூறியிருப்பது அவர்களின் கையாளாக தண்மையாகும்.
Post a Comment