Header Ads



கண்டியில் மாடு அறுக்க தடை விதித்தமைக்கு பலத்த பாராட்டு

(J.M.HAFEES)

உள்ளுராட்சி யாப்பு, அரசியல் யாப்பு இவை அனைத்தையும் விட அதிகாரத்தில் கூடியது 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எமது பாரம்பரயங்களாகும். புத்தரின் நல்லாசி மூலமே கண்டி நகரில் மக்கள் வசிக்கக் கூடியதாக இருப்பதாக அஸ்கிரிய பீடத்தின் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

கண்டியில் வசிக்கும் எந்த இனமானாலும் அவர்கள் அனைவருக்கும் புத்தபகவானின் அருள் கிடைப்பதாலே அவர்கள் வாழமுடிகிறது. கண்டியை மையமாக வைத்தே பௌத்த துரவரம் உதயமாகியுள்ளது. சரித்திர ரீதியாக வெளிநாட்டு ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிரான வீரம் படைத்த வர்கள் வாழ்ந்த இடம் கண்டி, இப்படியான புனிதமான கண்டியை பாழ்படுத்தும் வகையில் ஒரு நாளைக்கு சுமார் 25 மாடுகள் வரை வெட்டப்பட்டு கண்டி நகரின் புனிதம் பழுதடைந்து வருகிறது.

கண்டியின் பிரதான இடமான தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்கள் போன்றவற்றின் பிரதானிகளாக இருந்த ரத்வத்தை, மற்றும் லவ்கே குடும்பங்களின் வாரிசுவான மகேந்திர ரத்வத்தையினால் மட்டுமே 150 வருடகலமாக கண்டியில் மாடறுக்கப்பட்ட நடை முறையை மாற்ற முடிந்தது.

பிரித்ததானிய அரசு திட்டமிட்டு கண்டியின் புனித்ததை கெடுத்தது. கண்டி சுதும்பொல என்ற இடத்தில் தலதா மாளிகைக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை 1.5 பவுண் பணத்திற்கு ஒரு மைதானம் அமைக்கவென்று கொள்வனவு செய்து அதனை மாட்டறுப்பு மடுவமாக மாற்றியது. கண்டி புனித தலதா மாளியை மற்றும் நாக்க தேவால உற்பட புனித தேவாலயங்கள் அமைந்துள்ள காணியை பயன் படுத்தி புனித போல் (சென்போல்ஸ்) தேவாலயத்தை அமைத்தது. கண்டி பெரஹரா பற்றிய புகைப்படங்களில் தலதா மாளிகையின் பின்னணி இருக்க வேண்டிய இடத்தில்  சென் போல்ஸ் தேவாலயத்தின் பின்னணியையே வெளிநாடுகள் வெனியிட்டு வருகின்றன.

அதேபோல் தலதா மாளிகைக்குச் சொந்தமான போகம்பறை காணியில் மலே இனத்தவர் ஒருவரை அடக்கம் செய்ய பிரித்தானிய அரசு இடம் கொடுத்தது. பின்னர் சடலம் அடக்கம் செய்யப்பட்ட அவ்விடம் ஒரு பள்ளியானது. (இன்று லயன் பள்ளி என்று சொல்லும்) அவ்விடம் தலதா மாளிகைக்குச் சொந்தமானது. அதேபோல் கண்டியின் புனித பிரதேசங்களை அடையாளப் படுத்தும் கம்பங்கள் நடப்பட்ட சமயம் மீராமக்கம் பள்ளி உள்ள இடத்தில் கம்பம் இட்டு அடையாளப் படுத்துவதில் சிரமங்களை எதிர் கொண்டோம். மல்வத்தை புனித பூமி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வை.எம்.சி.ஏ. கட்டிடம் ஒன்று உள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டு 'விகாரகம பணத்த' (விகாரைகளுக்கான காணிகளை)  திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.

பெரஹரா காலத்தில் நகர வீதிகளில் ஏற்படும் நெறிசலைக் குறைக்கவே அன்று பிரதான வீதிகளுக்கு இடையே கிளை வீதிகள் (முடுக்கு அல்லது ஒழுங்கை) அமைக்கப்பட்டன.  இப்போது அவை தனியார்களுக்கு வியாபாரம் செய்ய குறைந்த விலையில் குத்தகைக்கு விடப்பட்டதுள்ளது. யடிநுவர வீதியையும் கொழும்பு வீதியையும் இணைக்கும் ஒரு முடுக்குப் பாதை 45000 ருபாவிற்கு ஒரு தனியார் ஒருவருக்கு காய்கறிக்கடைகளை அமைக்க வழங்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பல்வேறு சதிகளை தற்போதைய நகர பிதா மீட்டெடுத்துள்ளார்.

புத்தபகவான் கூறினார் 'இருகை, இருகால், நான்கு கால் உயிரினங்கள் கொலை செய்யப்படக் கூடாது' என்று. மனிதன் மட்டுமல்ல நான்கு கால் பிராணிகளும் கொலை செய்யபபடக் கூடாது. எனலே மனிதனுக்காக மிருகங்களை கொலை செய்யமுடியாது. மனிதன் மட்டும்தான் உயர்ந்தவன் என்று கூறப்படவில்லை. இரண்டு கை, இரண்டுகால், அல்லது நான்கு கால்கொண்ட அனைத்தும் உயர்தவையாகும்.

புனித பூமியான கண்டியை பாழ்படுத் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனேகம் உண்டு. அவை தடுக்கப்படவேண்டும். அதில் ஒன்றுதான் மாடுறுப்பு மடுவம் மூடப்பட்டமை. அதனைத்துணிந்து மேற்கொண்ட கண்டி நகர பிதாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

நகரசபை நிலையியற் கட்டளைகளின்படி நிதி தொடாபான விடயங்களுக்கு இவை தடையா இருக்கலாம். அதே நேரம் எமது அரசியல் அமைப்பிலும் நீண்டகால சம்பிரதாயங்கள் சட்டத்தை விட வழிமைகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எமது அரசியல் சட்டமானாலும் பிரித்தானிய சட்டமானாலும் அவை எதுவும். இன்று சட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது. 2500 வருட எமது பாரம் பரயங்களேதான் இந்நாட்டின் சட்டம். அதனை மேற்கொள்ள எத்தகைய தடைவ ந்தாலும் விடமர்டோம் என்றார்.கண்டி நகர பிதா மகேந்திர ரத்வத்தை கௌரவிக்கப்பட்டார். கண்டி நகரை பாதுகாக்கும் அமைப்பு (மகநுவரய சுரகீமே சங்விதானய) இவ்வைபவத்தை ஒழுங்கு செய்திருந்தது. 

அதன் தலைவர் நிமல் பஜரேமவன்ச உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

உலகிலுள்ள பௌத்த மக்களின் மனதை புண்படுத்தும் ஒரு செயல் கடந்த 150 வருடதாக கண்டியில் இட்; பெற்று வந்தது. அதேநேரம் எமது ஜனாதிபதி கூறினர். 'நான் இந்த நாட்டின் உரிமையாளன் அல்ல. இந்த நாட்டின் நம்பிக்கைப் பொருப்பாளன்' என்று அந்த வகையில் 6வது பராக்கிரமபாகுவிற்கு அடுத்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்து வரும் ஒரேதலைவர்தான் தற்போதைய ஜனாதிபதி. எமது நாட்டில் 1948ன் பின்னர் அல்லது 1971ன் பின்னர் கொண்டு வரயபட்ட இரசியல் அமைப்புக்களை விட 2500 வருடமாக நாம் பின்பற்றும் நடைமுறைக் கலாச்சாரமே எமது உண்மையான அரசியல் சாசனம். அதனை எவராலும் மாற்ற முடியாது. அதுவே இந்த நாட்டுச்சட்டமாகும்.

இவ்வாறு மிகத்துணிந்து மாநகர நிலையியற் சட்டங்களையோ அரசியல் அமைப்பு அடிப்படைச்ட்டகளையோ விட எமது 2500 வருட வராறு கொண்ட சட்டத்தை அமுல் படுத்த கண்டி நகர பிதா துணிந்து எடுத்த நடடிவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்றார்.

இங்கு நன்றி தெரிவித்து உரையாற்றி நகர பிதா மகேந்திர ரத்வத்தை கூறியதாவது,

நான் எதையும் தனியாகச் செய்யவில்லை. மூன்று மாதம் ஆராய்ந்து அதன் பின்பே முடிவெடுத்னே;. நகரசபை அங்கத்தவர்கள் எவரும் இதற்காக எதிர்புத் தெரிவிக்க வில்லை. மூன்று முஸ்லிம் அங்க்தவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அதனை எதிர்க்கவில்லை. அதேபோல் கண்டியில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாரும் கண்னம் தெரிவிக்கவோ ஊர்வலம் செல்லவோ இல்லை. எனவே சகலருக்கும் நன்றி கூறுவதை மட்டுமதான் என்னால் தெரிவிக்க முடியும் என்றார். 


4 comments:

  1. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு மது, கொளை, கொள்ளை, கற்பழிப்பு என தம் மக்களின் ஒழுக்கம்,பண்பாடு சீரழிந்து காணப்படும் நிலையில் அவ் ஆரறிவு ஜீவன்கனள மீட்டெடுப்பதை விட்டு விட்டு முன் வரிசை பிக்குகளே உயிரினங்கனள பற்றி பேசிக் கொண்டிருப்பது நகைச்சுவைக்குறியது..!

    ReplyDelete
  2. were is fayzal musthafa m peeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee????????????????????????????????????

    ReplyDelete
  3. கண்டி நகர சபை உட்பட கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தனித்துவம் என கூறிக்கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்தவர்களே இழக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?

    ReplyDelete
  4. This will be extended all over the island it's time for the public to come to the street to save our fundamental rights, no use of believing our selfish politicians let them keep lipping MR n rest of his family members legs.

    ReplyDelete

Powered by Blogger.