Header Ads



இராணுவ ஒத்துழைப்புகளை பலப்படுத்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்


இராணுவ ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஸ் கயானி நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

மூன்று நாள் தங்கியிருக்கும் அவர், நாட்டின் மூத்த படை அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். 

பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நிபுணத்துவ நலன்கள் குறித்து பேச்சு நடத்துவார் என்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வரும் 28ம் நாள் தியத்தலாவவில் உள்ள இராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் பாகிஸ்தான் இராணுவத்தளபதி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார். 

ஜெனரல் பர்வேஸ் கயானி இலங்கைக்கு  மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.  

No comments

Powered by Blogger.