Header Ads



உலகம் முழுவதும் ஈரான் உளவாளிகளை கொண்டுள்ளது - அமெரிக்கா

அமெரிக்காவின் ராணுவ தலைமை இடமான பென்டகனில் நேற்று சட்டவல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பென்டகனின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ஜெனரல் மார்டின் டெம்சே கூறியதாவது:- 

ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஈரானின் இந்த செயல்பாடுகள் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் உலகம் முழுவதும் உளவாளிகளை கொண்டுள்ளது. ஈரான் அதிக அளவில் ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இது உலகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. Mirandavanukku Aakashamellaam Pei

    ReplyDelete
  2. america utpathi seykintra ayuthangalaal ulaha nattukku achuruthal illaya..

    ReplyDelete
  3. அமெரிக்காவின் இக் கூற்றை நமது அரபுநாட்டு ஆட்சியாளர்கள்
    வேதவாக்காக சிரமேற்கொண்டு ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு தங்களது சகல வளங்களையும் கொடுப்பர் ...ஆனால் அரபு இரத்தம் 60 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலினால் பலஸ்தீனில் ஓட்டபடுவதை மௌன அங்கீகாரம் மூலம் அனுமதித்து வருவது தான் வேடிக்கையானது ..

    ReplyDelete

Powered by Blogger.