கல்முனை பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்புக்குழு விசேட கூட்டம்
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் இன்று (14) பி.ப. 3.30 மணியளவில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம்.கபார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர கலந்து கொள்ளவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம்.கபார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பிரதேசங்களையும் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், கல்முனை பொலிசார் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Post a Comment