சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை
(ஏ.எல்.ஜுனைதீன்)
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டம் கல்முனைத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பழைய வைத்தியசாலை வீதியில் சுமார் 50 வருட காலத்திற்கு முன் அமைக்கப்பட்ட ஒடுக்கமான பாலத்தை சகல வாகனங்களும் எளிதாகப் போக்கு வரத்துச் செய்யக்கூடியவாறு திருத்தி அகலம் கூடிய பாலமாக அமைக்கப்படல் வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இக் குறுகிய அகலமுடைய பாலத்தினூடாக பெரிய லாரிகள் போக்கு வரத்துச் செய்ய முடியாது இருப்பதுடன் ஒரே நேரத்தில் இரு வாகனங்களை இரு பக்கங்களிலும் செலுத்திச் செல்ல முடியாத ஒரு அவல நிலையும் காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச வைத்தியசாலைகளின் மருந்து விநியோக சாலை ஸ்ரீ லங்கா இளைஞர் பயிற்சி நிலையம் பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் வைத்தியசாலை வீதி தபாலகம் என்பன போன்ற அரச அலுவலகங்களுக்கு இப்பாலத்தினூடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான முக்கியத்துவம் உள்ள இப்பாலத்தை அகலமாக்குவதற்கு திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்களால் ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலமாக வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
பாலத்தை மட்டும் விஸ்தரிப்பதில் பிரயோசனம் இல்லை,பாதைகளை விஸ்தரிப்பதிலும் அக்கறை எடுக்கவேண்டும் என்று செய்தி இருந்திருந்தால் அதன் பெறுமானம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.....எனது ஆதங்கம் நம்மவர் வாழுமிடமெல்லாம் பாதை அபகரிப்பு ....மிக லாவகமாகவே நடக்கிறது .....ஆனால் அவர்களின் கபுரு எப்படி விரிந்து கொடுக்குமோ என்பதுதான்.....
ReplyDeleteஅபிவருத்தி குழு தலைவரும் எம் பி யாகவும் உள்ள ஹரீஸ் அவர்களுக்கு சாய்ந்தமருது அவரது மனைவியின் பிறப்பிடம் அவர் தனது மனைவிக்கு செய்யாவிட்டால் வேறு யாருக்கு செய்ய போகிறார். கவலைப்படாதீர்கள் அவர் கட்டாயம் செய்வார்
ReplyDelete