Header Ads



"முஷாரப் தேசத்துரோகத்திற்கான நீதிமன்ற விசாரணைக்கு உட்படவேண்டும் " நவாஸ்ஷரீப்

(அல்ஜசீரா + ரமீஸ் அப்துல் கையூம்)

முன்னாள் இராணுவ ஆட்சியாளர் முஷாரப் தேசத்துரோகத்திற்கான நீதிமன்ற விசாரணைக்கு உட்படவேண்டும் என பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷரீப் கூறியுள்ளார்.

"முஷாரபின் அதிகபட்ச தேசத்துரோக செயற்பாடுகள் எங்கும் பரவி மிகைத்து விட்டு இருந்தது ,அவர் தற்போது நீதிமன்றத்தில் தனது குற்றத்திற்கு பதில் சொல்லியாகவேண்டும்" என பாராளுமன்றத்தில் அவர் கூறினார். பாகிஸ்தான் நாட்டுசட்டத்தின் படி தேசத்துரோக விசாரணையானது மாநில அரசினாலேயே முன்னெடுக்க முடியும்.

கடந்த ஏப்ரலில், இடைக்கால அரசு முஷாரபின் விசாரணையை ஏற்க மறுத்தது.அது தங்களது அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது எனவும், வருகின்ற மே மாதத்தில் தெரிவாகும் புதிய அரசு அதனை தீர்மானிக்கட்டும் எனவும் கூறி இருந்தது.

"முஷாரப் தனது குற்றத்திற்கு பதில் அளித்தாகவேண்டும், நாங்கள் சட்ட ஒழுங்கை பின்பற்றுவோம், எல்லாவகையான அரசியல் சக்திகளும் கருத்திற்கொள்ளப்படும்" எனவும்  முஷாரப் அரசியல் யாப்பினை இரு தடவைகள் மீறியுள்ளார், அவர் 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தினை  தூக்கிஎறிந்துவிட்டு, அனைத்தையும் நாசவலையில் வீழ்த்தினார். நீதிபதிகளை பதவி விலக்கினார்:சிறையில் அடைத்தார் எனவும் ஷரீப் கூறினார்.

ஷரீப் 1999 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது கட்டுப்பாட்டுடன் கூடிய ஆட்சியில் பிரதமராக இருக்கும்போது முஷாரபினால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

1999 முதல் 2008 வரை ஆட்சி செய்த முஷாரப், 2006 இல் பலுசிஸ்தானின் பழங்குடி தலைவர் ஒருவரின் கொலைச்சதியில் சம்பந்தப்பட்டுள்ளதால் தற்போது வீட்டுக்காவலில்உள்ளார். நாடு கத்தப்பட்ட அவர் இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.