Header Ads



உலமாக்களுக்கு தொழில்நுட்ப கல்வியின் அவசியம்..!

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உலமாக்களுக்கான தொழில்நுட்ப பல்கலைக்கல்லூரி ஒன்றை காத்தான்குடியில் நிறுவுவதற்கு முயற்சி செய்துள்ளதாக அறிய கிடைக்கின்றது. இது மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கனவுகளில் ஒன்றாகும். இதனை ஹிஸ்புல்லாஹ் நிறைவேற்றுவாராக இருந்தால் அது தமது தலைவருக்கு செய்யும் நன்றி கடனாக கருதலாம். 

இதன் பின்னனி  வரலாற்றை எல்லோரும் அறிய கூற விரும்புகின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பாணந்துறையில் கட்சிப் பிரசார கூட்டம் ஒன்றுக்கு சென்ற போது நானும் சென்றிருந்தேன். அங்கு மருதமுனையை சேர்ந்த ஒரு மௌலவி அவர் ஒரு ஹாபிஸும் கூட, பாய்க்கட்டை தலையில் சுமந்து விற்று வருவதை கண்டோம். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அந்த மௌலவியுடன் கனிவாக உரையாடிவிட்டு அவர் சென்ற பின் என்னை பார்த்து பின்வருமாறு கூறினார்.

“இல்மையும் குர்ஆனையும் சுமந்த இந்த தலைபாய் சுமக்கிறதே” என்று ஆதங்க பட்டுக்கொண்டார். இதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் மௌலவிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இப்பொழுது வழங்குவதில்லை. இவர்கள் சுயமாக கண்ணியாமாகவும் வாழக்கூடிய ஒரு கருத்திட்டத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று பணித்தார். அவர் அமைச்சராக வந்த பின்பு  நான் ஆலோசகராக நியமிக்கப்பட்டு எழுதிய 75 கருத்திட்டங்களுள் (Projects) உலமாக்களுக்கான கருத்திட்டமும் நூற்றி ஐம்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தயாரிக்கப்பட்டது. 

இதற்காக நான் முஸ்லிம் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நூற்றி ஒரு அரபு மத்ராசகளில் சென்று தகவல் திரட்டியுள்ளேன். ஒவ்வொரு மத்ரசாவும் வெவ்வேறு பாடத்திட்டத்தை கற்பித்து மௌலவி சான்றிதல் வழங்கின. எனவேதான் ஒரு கருத்தினை கேட்பதுக்கு பத்து மூலவிகளை அழைத்தால் அங்கு பதினோரு அபிப்பிராய பேதங்கள் இருக்கும். இதற்கு காரணம் ஜாமியா நலீமியாவை போன்று ஒருங்கிணைக்கப்பட்ட  பாடத்திட்டம் அவர்களிடம் இருக்கவில்லை. எது எப்படி இருந்த போதிலும் எட்டு ஆண்டுகளாக கல்வி கற்ற அவர்களிடம் அரபு மொழி அறிவு இருந்தது . எனவேதான் இந்த மொழியறிவை பயன்படுத்தி மத்தியகிழக்கு நாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவை வழங்கி அவர்களை செயலாளர் பதவி மற்றும் முகாமையாளர் போன்ற துறைகளில் கணணி, ஆங்கிலம், அறபு ஆங்கில மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என நாங்கள் கருதினோம். அதற்கான projectஉம் தயாரிக்கப்பட்டது. 

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அகால மரணம் அடைந்த போது எனது அறையில் அவர் பணிப்பின் பேரில் எழுதப்பட்ட ஐம்பத்தி மூன்று projectகள் கிடப்பில் கிடந்தன. 

பேரியல் அஷ்ரப் அவர்கள் இத்தா முடிந்து வந்ததும் இனிமேல் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி கலந்துரையாடினார் . அந்த ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் முடிந்திருந்தன. எனது பொறுப்பில் உள்ள projectகளுக்கு முற்பணமாக ஒதுக்கப்பட்ட பத்து மில்லியன் ரூபா மட்டுமே அமைச்சில் இருந்தது. பேரியல் அஷ்ரப் அவர்கள் ஜவாதின் வேண்டுகோளுக்கு இணங்க கல்முனை கடற்கரை பள்ளி வீதியை அமைப்பதுக்கு இந்த பணத்தை ஒதுக்கினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. 

அப்பொழுது MP ஆக இருந்த றஊப் ஹகீம் அவர்கள் தான் இதனை செய்ய விரும்புவதாகவும் தனது மாமானார் குவைத்தில் தூதுவராக இருப்பதால் ஒரு ஷேக்குடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இந்த project ஐ நாற்பது மில்லியஙன்களாக குறைத்து சுருக்கமாக எழுதி தரும்படி கேட்டார். நான் இலங்கையில் உள்ள பத்து மதரசாக்களை மாத்திரம் தெரிந்து அவற்றில் தொழில்நுட்ப பிரிவை ஏற்படுவதற்கு தயார் செய்து கொடுத்தேன். ஈமான் (Imaan) என்ற பெயரில் ஒரு NGO வை உருவாக்கி அதன் மூலம் செய்வதாக றஊப் ஹகீம் அவர்கள் கூறினார்கள். அவ்வளவுதான் அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியாது. ஆனால் எனக்கு Carnivel Ice Cream பொதி ஒன்று கிடைத்தது அவ்வளவுதான். 

இப்போதுள்ள நிலையில் ஹிஸ்புல்லாஹ் செய்யும் இந்த சேவை முஸ்லிம் சமூகத்திற்கு முக்கியமான சேவையாகும். ஆனால் இந்த BBS அம்பாறையில் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்களே. எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்..!

MHA. Samad
Former Advisor to Marhoom Ashroff and feriyal Asroff.      

2 comments:

  1. நீங்கள் நினைப்பதுபோல் இது மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

    ஏனெனில் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோது கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த நிதி ஒதுக்கீடுகளில் ஒரு குப்பைத் தொட்டி கூட இன்று அவரது பெயரை நினைவூட்டுவதாக எமதூரில் இல்லை.

    அவரது நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்ட இஸ்லாமிய கலாச்சார மத்திய நிலையம் கூட இன்று ஹிஸ்புல்லாவின் பெயர் தாங்கிய மண்டபமாகவே பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

    எமது மண்ணின் மைந்தன் எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதில் அவருக்கும், அவரது சகாக்களுக்கும் சுயநலன்கள்தான் மிகைத்திருக்கும்.

    நீங்கள் தலைவருக்கு விசுவாசமாகச் செயற்பட்டதுபோல் இவர் செயற்படுவார் என்பதை இன்னமும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றீhகள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. அத்தோடு அஷ்ரபின் வரலாறையும் கொஞ்சம் ஞாபகப் படுத்தினால் நல்லது...

    அஷ்ரப் தமிழனோடு சேர்ந்து தமிழீலம் கேட்டு விட்டு.. அங்கிருந்து உதை பட்டு சுதந்திரக் கட்சியில் விழுந்து.. கடைசியாக மாட்டு முஸ்லிம்களை ஏமாற்றி பாராளுமன்றம் சென்றதையும் எல்லோரும் நன்றாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.