Header Ads



மாவடிப்பள்ளி வீதிகள் திருத்தப்படுமா..?


(ஏ.எல். ஜுனைதீன்)
    
    மாவடிப்பள்ளியை அடுத்துள்ள சின்னப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் கிறவலால் போடப்பட்ட பாதையை வாகனப் போக்கு வரத்திற்கு ஏற்ற வகையில் பெரும் போக்கு வரத்துப் பாதையாக மாற்றி கல்முனை பஸ் நிலையத்துடன் இணைப்பதன் மூலம் கல்முனை தொடக்கம் மாளிகைக்காடு வரையிலான பிரதான பாதையில் தற்போது நிலவும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என இப் பிரதேச புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    மாவடிப்பள்ளியிலிருந்து இப்பாதை தற்பொழுது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் வொலிவோரியன் கிராமத்தின் ஊடாக சாய்ந்தமருது பொதுச் சந்தை வரை  வந்தடைகின்றது. இவ்வாறு வந்தடையும் இப்பாதையை பெரும் தெருவாக மாற்றி கல்முனை நகரத்துடன் இணைப்பதன் மூலம் அம்பாறை நகரத்தின் ஊடாக கல்முனை மற்றும் மட்டக்களப்பு நகரங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் இப்பாதையால் செல்ல முடியும் அல்லது இப்பதையை அமைப்பதன் மூலம் கல்முனை தொடக்கம் காரைதீவு சந்தி வரையிலான பிரதான பாதையை ஒரு வழிப் பாதையாகவும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இது விடயத்தில் அம்பறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபை மேயர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் பிரதேச நலன் விரும்பிகள் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

No comments

Powered by Blogger.