வடமாகாண சபை தேர்தல் - கொழும்பில் நேர்முக பரீட்சை ஆரம்பம்
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் அதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முழு மூச்சில் இறங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட வேட்பாளர் நேர்முகத் தேர்வில் வடக்கு மாவட்டங்களில் இருந்து 53 பேர் பங்குபற்றினர் என்று மூத்த அமைச்சர் பௌசி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டும் 20 பேர் வந்திருந்தனர். முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களுக்கு பிறிதொரு தினத்தில் நேர்முகத் தேர்வு வைக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தங்கவேல், சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சாவகச்சேரி நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தன், யாழ். மாவட்ட கிராமியக் கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு ஓரளவு தெரிந்த முகங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteநாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களிலும், மாகாண சபைகளிலும் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்களும், தலைவர்கள் மற்றும் மாகாண அமைசசர்களுமே அதிகளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மறியல், விளக்கமறியல்களில் உள்ளதாகவும் அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
ReplyDeleteஎமது காத்தான்குடி நகர சபையையும் அரசாங்கத் தரப்பே கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றது. இச்சபையின் தவிசாளருக்கும், சக ஆளுந்தரப்பு உறுப்பினருக்கும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவு செய்யும் வேட்பாளர்களாவது நல்லொழுக்கங்களும், பண்பாடுள்ள மனிதர்களாகவும் இருப்பதற்கு இறைவன் துணை புரிவானாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-