Header Ads



வேற்று கிரக மனிதனின் இறந்த உடல் குறித்து சீனாவில் பரபரப்பு


வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா.. அவர்கள் எப்படி இருப்பார்கள்.. இதுபோன்ற பல கேள்விகள். விடைதான் கிடைக்கவில்லை. ஆனால், கற்பனை மட்டும் பலருக்கு பலவிதமாக பரபரக்க.. ஹாலிவுட் படங்கள் மூலமாக கோடிக்கணக்கில் பணத்தை வாரி சுருட்டி கொண்டார்கள். பறக்கும் தட்டில் வேற்று கிரக மனிதர்கள் திடீர் திடீரென பூமிக்கு வருகிறார்கள். இங்குள்ள விஷயங்களை ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்கள் நம்மைவிட திறமையானவர்கள். கம்ப்யூட்டர் அறிவில் புலிகள். மாயாஜாலத்தில் சிங்கங்கள்.. இப்படி சொல்லி சொல்லியே அலுத்து விட்டது.

அறிவியல்பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நிற்கவில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மர்மம் நீடிக்கும் நிலையில் சீனாக்காரர் ஒருவர் வேற்று கிரக மனிதனின் (ஏலியன்) ‘கொள கொள’ சடலத்தை தன் வீட்டு பிரீசரில் பாதுகாத்து வருகிறார் என்ற தகவல் சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்கு ஆதாரமாக அந்த சீனாக்காரர் வெளியிட்ட படங்கள் இன்னும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

சீனாவில் உள்ளது பின்சூ ஷாங்டாங் மாகாணம். இந்த மாகாணத்தின் வழியாக மஞ்சள் ஆறு ஓடுகிறது. அதன் கரையோரம் வசிப்பவர் லீ. இவர்தான் ஏலியனின் சடலத்தை வைத்துள்ளார். மஞ்ச ஆத்தங்கரயோரம் போன மார்ச் மாசம் ஒரு நாள் ராத்திரி போனேனா.. வானத்துல இருந்து பறக்கும் தட்டா போச்சா. அதுல ஒண்ணு கீழ எறங்கி வந்துச்சு. கரன்ட் வயர்ல பட்டதுல தீப்பத்தி எரிஞ்சு போச்சு.. கொஞ்ச நேரம் கழிச்சு போய் அந்த எடத்த பாத்தா, அங்க முயல் பிடிக்க வச்சிருந்த வலையில மனுஷன் மாதிரியே ஒரு பொணம் கிடந்தது. அத பார்த்தா வேற்றுகிரக மனுஷன்னு தெரிஞ்சு வீட்டுக்கு தூக்கி வந்துட்டேன் என்கிறார் 

அத்துடன் ஏலியனின் சடலம், கை, கால்களை படங்கள் எடுத்து ஆன்லைனில் வெளியிட்டார். அவற்றை பார்த்த சீன மக்கள் பரபரப்பு அடைந்தனர். ஆனாலும் சும்மா புருடா, அந்த ஆள் ஏமாத்துறாரு, சதி இருக்கிறது என்றெல்லாம் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

வேற்று கிரக மனுஷன் சடலத்தை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் போலீஸ் சும்மா இருக்குமா? லீ வீட்டுக்கு போய் தீவிர விசாரணை, ஆய்வு, துருவி துருவி, கிடுக்கிப்பிடி.. இப்படி பல வகையறாக்களில் அக்கு வேறு ஆணி வேறாக விசாரணை நடத்தி விட்டு திரும்பினார்கள்.

அட சப்ப மேட்டர்ங்க. சினிமாவுல காட்டுற ஏலியன் போலவே இமிடேட் பண்ணி மனுஷன் பொம்மை செஞ்சிருக்காரு. ஹை குவாலிட்டி ரப்பரில் செய்யப்பட்ட தத்ரூப பொம்மை என்று ஜினான் போலீசார் ஆன்லைனில் விளக்கம் அளித்து ஒதுங்கி கொண்டனர். அவர்களது விளக்கம் நம்பும்படி இல்லை என்கிறது இன்னொரு கூட்டம். லீ வைத்திருக்கும் ஏலியனை உண்மை என்று நம்பி ஆன்லைனில் பல கதைகளை அவிழ்த்துவிட்டபடி இருக்கிறார்கள். Tmailmurasu (India)

No comments

Powered by Blogger.