தங்கச் சுரங்கத்திற்காக சண்டையிடும் அரேபிய பழங்குடிகள்
சூடான் நாட்டிலுள்ள தர்பார் பகுதியில் நிறைய தங்கச்சுரங்கள் செயல்படுகின்றன. இங்கு 5 லட்சம் மக்கள் அரசு அனுமதி பெற்ற, பெறாத தங்க சுரங்கங்களில் வேலை செய்து வருகின்றனர். சூடானுக்கு அதிக அளவு வருமானம் தங்கம் ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது.
இந்த தங்க சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பானி ஹூசைன் மற்றும் ரிஸைகாட் என்ற இரு அரேபிய பழங்குடியின குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமையன்று அவர்களிடையே நடந்த சண்டையில் பானி ஹூசைன் பிரிவினரை சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல வருடங்களாக அவர்களிடையே சர்வதேச அளவில் சமர முயற்சிகள் எடுக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இப்பகுதியில் போராளிகள், ராணுவம், பழங்குடியினர்கள் என இவர்களிடையே நடக்கும் மோதல்களுக்கு பயந்து 3,00,000 மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
Post a Comment