கசினோ சூதாட்ட விடுதிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோமேன பௌத்ததேரர் எச்சரிக்கை
கொழும்பில் கசினோ எனப்படும் சூதாட்ட விடுதி அமைக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை எனில் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அஸ்கிரி விகாரையின் ஸ்ரீ புத்திக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சம்போடி விகாரைக்கு அண்மையில் மிகப் பிரமாண்டமாக கசினோ சூதாட்ட விடுதி அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சூதாட்ட விடுதி அமைப்பதற்காக செயற்படும் எந்தவொரு அதிகாரிக்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். adt
Post a Comment