Header Ads



மாணவர்களுக்கு பரிசுப்பொதி ஏற்படுத்திய ஆச்சரியம் - பெற்றோர்கள் சங்கடம்

(Sfm) பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற வெளிச்சக் கூடு போட்டியில் பங்கு பற்றிய பாடசாலை மாணவர்களுக்கு அபூர்வமான பரிசுப்பொதிகள் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று வெளிஓய சம்பத்நுவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பொசொன் பக்தி பாடல் நிகழ்ச்சியும். வெளிச்சக் கூடு கண்காட்சியும் நேற்றிரவு வெளிஓய சம்பவத்நுவர பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. பிரதேசத்தின் அனைத்து தர்ம பாடசாலைகளினதும் மாணவர்கள் அதில் பங்கு கொண்ட நிலையில், அவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் பரிசுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் 11 மற்றும் 12 வயதுடைய பலருக்கு ஆறுதல் பரிசுகள் அதிகளவில் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கப்பட்ட பின்னர் பெற்றோரும் மாணவர்களும் தமது பரிசுகளை உறையை அகற்றி ஆராய்ந்துள்ளனர்.

பரிசுப்பொதிகளில் உடனடி சவரம் செய்வதற்கான அலகுகள், பற்பசை, பெண்கள் பயன்படுத்தும் துவாய்கள் என்பன இருந்தமையையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதன்காரணமாக தாம் பிள்ளைகளின் முன்னால் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் வெளிஓய சம்பவத்நுவர பிரதேச செயலத்திடம் வினவியபோது தாம் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.