இலங்கை அரசிடமிருந்து பொறுப்புணர்வையும், நேர்மையையும் எதிர்பார்க்கிறதாம் அமெரிக்கா
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பொறுப்புணர்வையும், நேர்மையான மறுசீரமைப்பையுமே எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்டெபன் ஜே ராப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவையும் இதுவரையில் முழுமையாக அமுலாக்கப்படாதுள்ளமை குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மேற்கொள்ளக் கூடிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமையை அவர் வரவேற்றுள்ளார். sfm
இம்போசிபிள்....
ReplyDeleteசட்டியில இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு!
ஏங்கட நாட்டில மருந்துக்கும் இல்லாதவைகளை அமெரிக்கா கேட்டால் ஏங்கட தலைவர் எவ்வளவு சங்கடப்படுவார் என்பது இந்த அமெரிக்காவுக்கு புரியமாட்டேங்குது. என்ன செய்யலாம் அமெரிக்காவில அறவே இல்லாதவிடயத்தைத்தான் கேட்கிறாங்க பாவம்...