வக்பு சபை + முஸ்லிம் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு உதவியா..? உபத்திரவமா..??
(டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்)
இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமய ஸ்தலங்கள் யாவும் தனிப்பட்ட நபர்களால் அல்லது குடும்பத்தினரால் அல்லது சிறு குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இவற்றைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் இவர்களே பல நூற்றாண்டுகளாக முன்னின்று பாடுபட்டனர். மேலும் இவர்கள் பல சொத்துக்களை பள்ளிவாசல்களின் வருமானத்திற்காக வழங்கியுள்ளனர்.
எனவே இப்பள்ளிவாசல்கள் மற்றும் சமயஸ்தலங்களை ஆரம்பித்துப் பராமரித்தவர்களின் வாரிசுகள் அல்லது அவர்களால் தெரிவு செய்யப்படுபவர்களே இவற்றை சிறந்த முறையில் நிர்வகிக்கத் தகுதியுடையோர்களாக இனம் காணப்பட்டனர். இவர்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவை எழவில்லை.
1950ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த வேறு பலரும் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கும் பராமரிப்புக்கும் உதவினர். அத்துடன் வெளி நாட்டு உதவிகளும் அரச உதவிகளும் சில பள்ளிவாசல்களுக்கு கிடைக்கப்பெற்றன.; எனவே பள்ளிவாசல்களினது வரவு செலவுகளையும் பரிபாலனத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1956ம் ஆண்டின் 51ம் இலக்கச் சட்டப்படி வக்பு சபையும் பின்னர் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களமும் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் வெகு சிறப்பாகவும் பள்ளிவாசல்களுக்கு உதவியாகவும் இருந்தபோதும் தற்காலத்தில் பள்ளிவாசல்களினது பரிபாலனத்திற்கும் நம்பிக்கையாளர்களினது நன்மதிப்புக்கும் இந்த நிறுவனங்கள் உதவி ஒத்தாசை வழங்குவதை விடவும் முட்டுக்கட்டையாகவே உள்ளன.
வக்பு சபை உறுப்பினர்களாக நன்மதிப்புப்பெற்ற மார்க்க அறிஞர்கள், சிரேஷ;ட சட்டத்தரணிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் போன்றவர்களை நியமிப்பதற்குப் பதிலாக அரசியல் வாதிகளின் அடிவருடிகள் எவ்வித தராதரமும் பாராது நியமிக்கப்படுகின்றனர்.
பள்ளிவாசல்களின் நிர்வாகங்களுக்கு எதிரான முறைப்பாடுகள் பெரும்பாலும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி, அரசியல்ஃசமய கருத்து வேறுபாடுகள், நிர்வாகத்தின் தீhமானங்களில் திருப்தியடையாத பள்ளிவாசல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களின் செயற்பாடுகள் காரணமாகவே செய்யப்படுகின்றன. பள்ளிவாசலின் நன்மைக்காகவும் ஊழல்,மோசடி,வீண்விரயம் போன்ற வற்றை ஒழிப்பதற்காகவும் இஸ்லாமிய நெறிமுறைகளில் வழிநடாத்துவதற்காகவும் முறைப்பாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் நிர்வாகத்துடனேயே கலந்துரையடுவார்கள்.
எனவே முறைப்பாடுகளின் நம்பகத்தன்மை பற்றி முதலில் ஆராயாமல் பள்ளிவாசல் பொறுப்புதாரிகளை விசாரணைக்கு பல தடவைகள் கொழும்புக்கு அழைப்பது பல சிரமங்களையும் வீண்விரயங்களையும் ஏற்படுத்துவதோடு எதிர் காலத்தில் சமூகத்தில் உள்ள நன்மதிப்பாளர்கள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பதவி வகிக்க முன்வருவதைத் தடுக்கின்றது.
முறைப்பாட்டுக்காரர்களை நேர்மையானவர்களாகவும் பள்ளிவாசல் பொறுப்புதாரிகளை நன்மதிப்பற்றவர்களாகவும் வக்பு சபை நோக்குமாயின் அது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை வழிகேட்டுக்கு இட்டுச்செல்லும.; அத்துடன் பள்ளிவாசலின் பரிபாலனம் அரசியல் மற்றும் பொருளாதார நோக்கத்திற்காக பள்ளிவாசலைத் துஷபிரோயாகம் செய்யக்கூடியவர்களுக்கு கைமாறும.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் பள்ளிவாசல்களின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக முறைகளில் தேவையான ஆலோசனைகள்,உதவி ஒத்தாசைகள் வழங்க முன்வருவதில்லை. பள்ளிவாசல்கள் அனுப்பும் கோரிக்கைளுக்கு உரிய நடவடிக்கைள் எடுப்பதிலும் அனுமதி வழங்குவதிலும் மிகுந்த அசிரத்தை காட்டப்படுகின்றது. இதனால் பள்ளிவாசல்களுக்கு நஷ;டங்களும் அசௌகரியங்களும் ஏற்பட்டுள்ளன.
மாறாக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கெதிரான முறைப்படுகள் தொடர்பான நடவடிக்கைகள மிகக் கச்சிதமாக செயல்படுத்தப்படுகின்றது.
மேற்படி நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு யாருடையது என்பது தெளிவற்றதாக உள்ளது. ஹஜ் பிரயாண எற்பாடுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று போட்டி போடும் முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் நாம் தான் என்று கூறும் முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் இவ்விடயத்தில் கரிசனை காட்டக்கூடாது.?
மேற்படி நிறுவனங்களை இல்லாதொழிக்கவேண்டும் என்ற இனத்துவேஷ கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் இக் கால கட்டத்தில் நல்லாட்சி மூலம் சமூக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது சமூகத்தலைவர்;களினது கடமையல்லவா?
எதிர்காலத்தில் பின்வரும் விடயங்களில் கவனம் செலத்துவது மிக அவசியமாகவுள்ளது.
1. வக்பு சபைக்கு நன்மதிப்புப்பெற்ற மார்க்க அறிஞர்கள், சிரேஷட சட்டத்தரணிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் போன்ற தகுதியானவர்களைத் தெரிவு செய்வதோடு அனுபவம் உள்ள ஓருவர் தலைவராக இருத்தல் வேண்டும.;
2. வக்பு சபையின் அமர்வுகள் மாவட்ட ரீதியாக நடை பெற வேண்டும்
3. விஷமிகளின் முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முறைப்பாடுகளின் நம்பகத்தன்மையை குறிப்பிட்ட பிரதேசத்திற்குச் சென்று விசாரித்து உறுதிப்படுத்தவேண்டும்
4. நம்பிக்கையாளர்சபைகளின் தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் வக்பு சபை அல்லது திணைக்களம் விரைவாக அங்கீகரிக்கவேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்பி விசாரிக்க வேண்டும.;
5. பள்ளிவாசல் பரிபாலனம் தொடர்;பாக ஒவ்வொரு பிரதேசத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் வேறுபட்டதாகவுள்ளது. எனவே மரைக்கார் சபை நியமனம் மற்றும் நம்பிக்கையாளர் தெரிவு போன்ற விடயங்களில் பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். மாற்றம் அவசியமாயின் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துரையாடி முடிவெடுக்கவேண்டும்
யதார்த்தமான முக்கியமான கருத்துக்களும் பரிந்துரைகளும் கூரப்பட்டுள்ளன. உரியவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா..??
ReplyDeleteடாக்டர், சமூகத்துக்கான உங்கள் பனி தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாரேதான் காழி விவகாரமும். எத்தனையோ பெண்கள் தமது காழியாரின் முறையான நடவடிக்கையின்மையால் இன்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே முஸ்லிம் சமூக பிரமுகர்களே இந்த காழி விடயத்தினையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteசட்டத்தரணிகளில் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் சேர்த்துக் கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ReplyDelete