Header Ads



வைத்தியசாலை பணியாளர்களே உயிர்களுடன் விளையாடாதீர்கள்..!


என் அன்புக்குரியவர்களே!
கீழ்வரும் உண்மைச் சம்பவத்தின்பால்  உங்கள் கவனத்தை  செழுத்துமாறு தங்களை வேண்டிக்கொண்டவளாக, 

“நேற்றிரவு (28.05.2013), நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு இளம் பயிற்சி தாதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த  கிருலப்பனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து துாக்கி வீசப்பட்டு என்னுடைய காருக்கு முன்பாக வந்து  விழுந்தார்.  சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை வெள்ளவத்தை பொலிசார் விசாரணை செய்து கொண்டிருந்த இவ்வேளையில் நானும் எனது நண்பரும் விழுந்த அந்தப் பெண்ணை இலங்கையின் மிகப்பெரிய வைத்திய சாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றோம். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை நாங்கள் அண்மித்த போது அங்கிருந்த ஒரு தாதி நோயாளியை சக்கரம் கொண்ட படுக்கையில் அமர்த்தி கொண்டு செல்லுமாறு எங்களை வேண்டிக் கொண்டார் .

நேற்று வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு வேலைகள் நிறைந்த ஒரு இரவாக இல்லாதிருந்த போதிலும் பல சிரமங்களையும் , பலரை தொல்லைப்படுத்தியும்  அந்த விபத்துக்குள்ளான நபரை விபத்துப் பிரிவில் அணுமதிக்குமாறு பொறுப்பானவர்களை வேண்டிக் கொண்டோம். அப்போது அந்த நோயாளி இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இவதை கவணிப்பதை விடவும் , அன்று அந்த  ஒரு மணித்தியாலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியர்களும், தாதிகளும் , பணியாளர்களும் வைத்தியசாலையின் தொலைக்காட்சியில் “SOAP OPERA” நாடகம் பார்ப்பதற்கே அதிக முன்னுரிமை அளித்தமையை எங்களால் கண்டு கொள்ள முடிந்தது. இதற்கு சாட்சியாக என்னால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைத்துள்ளேன்.. 

பல வேதகைளுக்குப் பின்னர்  , அந்த நோயாளிப் பெண்ணின் X-RAY இனைப் பெற்றுக்கொண்டு விபத்துப் பிரிவில் அங்கும் இங்குமாக ஓடி ஒரு வைத்தியரிடம் அந்த நோயாளியை காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தேவைப்பாட்டையும் விபரித்து  இப்பெண்ணைப் பார்வையிடுமாறு அவரிடம் மன்றாடினோம்.இறுதியில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அந்தப் பெண் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அந்தப் பெண்  ஆபத்தான நிலைமையிவ் இருக்கக் கூடாது என்று நாங்கள்  பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் நான் கோபத்தையும் வெறுப்பையும் உணர்ந்தேன். வைத்தியசாலையில் கண்ட நிகழ்வுகள் என்னை வெகுவாகப் பாதித்தது. அவசர தேவையுடைய ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு அந்த வைத்தியசாலை எடுத்துக்கொண்ட கரிசனையை கண்டு நான் திகைப்படைந்தேன். 

சாதாரண மக்கள் வைத்திய சிகிச்சைகளை பெறுவதில் எவ்வளவு சிரமப்படுகின்றார்கள் என்பதை நினைத்து வெட்கப்பட்டேன். இது போன்ற சம்பவங்களை என்னுடைய வழ்வில் இதற்கு முதல் நான் சந்தித்ததில்லை. இதுதான் இந்த “சொர்க்கத் தீவின்” (Island in Paradise) சோகமயமான உண்மை நிலை.

மனித உயிர்களுக்கு பெறுமதியற்ற, மதிப்பற்ற இந்த நாட்டில் வாழ்வதையிட்டு இன்று நான் வெட்கப்படுகின்றேன். உள்ளார்ந்த கருணையும், இரக்க உணர்வும் இப்போது நமது கலாசாரத்தில் வெறும் கதைகளாகவே காணப்படுகின்றன.

இது போன்ற விடயங்களில் சீர்திருத்தங்கள் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட இந்த நாட்டின் வளர்ச்சியில் குறைந்தபட்டச அளவிலான பங்களிப்பையேனும் வழங்கக்கூடிய பல இளைஞர்கள் இருக்கின்றார்கள். எனவே இந்த செய்தியை அத்தகைய விரும்பத்தக்க மாற்றத்தை , இது சிறிதளவாயினும் ஏற்படுத்த விரும்பும்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் நல் உள்ளங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள்.

நன்றி
இப்படிக்கு,
செலீனா டீ. பீரிஸ்

Dear Sirs/Madams,

Forgive me for sending out an impersonal email. I wish to draw your attention to the following.   

Last night (28.05.2013), a young trainee nurse from Nawalapitiya was tossed out of a moving bus unto the bustling street in Kirulapone and fell right in front of my moving car. While a Police Officer from the Wellawatte Station was questioning the bus driver, a friend and I rushed her to the General Hospital of Colombo - the biggest government hospital in this entire country. Upon reaching the emergency entrance of the hospital, we were ordered by the nurse at the entrance to wheel out a stretcher and to place the patient on this stretcher. It was not a busy night. Having so done, we were then ordered to push her into to the accident ward which, after disturbing many, we actually found. Here we had a patient who was vomiting out blood and as far as the attendants, nurses and doctors were concerned, the soap opera on TV was far more important to attend to at this hour. I attach a picture as evidence of this. After painfully having managed to get her an x-ray, we had to run around the ward to convince the doctor that this patient was actually worth having a look at. Finally, after about 2 hours of mayhem, she was admitted to the ward and were praying that she has no major injuries. 

The anger and disgust that I felt at this period of time affected me to the very core of my being. I was appalled at the treatment which ordinary citizens face in times of greatest need and ashamed that I was too "privileged" never to have experienced this before. This is the sad reality of this "Island in Paradise". I am ashamed today to live in a country with such blatant disregard for human life. The compassion and loving kindness so inherent to our culture is now merely folklore. 

There are great many young people who are willing to take a stand for reforms in a manner that is the least counter productive for the growth of this country - please help us to do so by sharing this message with people who can make a change, however small. 

Thank you
Yours,
Selyna 

2 comments:

  1. Indeed.. a Heartbreaking story but not shocking to me because even worse is happening in our country such as Top Police personal is running underworld business, once upon noble medical service is completely running for money, so called educated people are teasing inncent people, working class is being looked down upon. Everywhere corruption, bribe & misuse. Good id bad and bad is good. We are made so foolish that Mega Casino is like our source of income... Where are we?

    ReplyDelete
  2. இங்கே உள்ள வைத்தியசாலைப் புகைப்படத்தில் ஜுப்பா, தொப்பி அணிந்த ஒருவரும் நின்று நாடகம் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் பொழுது மனதிற்கு சங்கடமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.