Header Ads



மோசமான நிர்வாக நடவடிக்கை - அரசுத்துறை நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு

மோசமான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, அரசுத்துறை நிறுவனங்கள் கடந்த ஆண்டில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2012ஆம் ஆண்டில், 55 அரசுத்துறை நிறுவனங்களுக்கு 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்களில்,பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 2005இல் 9.8 பில்லியன் ரூபாவை இலாபமாகப் பெற்றுள்ளது. அதற்கு கடந்த அண்டில் 89.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

மின்சாரசபையின் நட்டம் 2005ஆம் அண்டில் 6.8 பில்லியன் ரூபாவாக இருந்தது. 2012இல் 61.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் 2005இல் 834 மில்லியன் ரூபாவை இலாபமீட்டிய போதும், கடந்த ஆண்டில் 25.9 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது. 

மிகின் லங்கா விமான நிறுவனம் 2.8 பில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளது. 

சிறிலங்கா போக்குவரத்துச் சபை 4.6 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகிறது.

விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் நட்டம் 4.8 பில்லியனாகவும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபையின் இழப்பு 252 மில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

No comments

Powered by Blogger.