அட்டாளைச்சேனை பிரதேசசபை வழங்கிய நியமனங்களை உடனடியாக ரத்துச்செய்ய உத்தரவு
உள்ளுராட்சி சபைகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முற்றிலும் முரணான வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அண்மையில் வழங்கப்பட்ட வரி வசூலிப்பாளர் மற்றும் பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் ஆகிய இரண்டு நியமனங்களையும் உடனடியாக ரத்துச் செய்யுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 'யுனொப்ஸ்' நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் வகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையானது வரி வசூலிப்பாளர் மற்றும் பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் ஆகிய இரண்டு பதவிகளுக்கான நியமனங்களை அண்மையில் வழங்கிருந்தது.
ஆனாலும், குறித்த இரண்டு நியமனங்களும் உள்ளுராட்சி சபைகளுக்கான ஆட்சேர்ப்பு முறைமைக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து - அந்த நியமனங்களை உடனடியாக ரத்துச் செய்யுமாறு 21 ஜுன் 2013 எனும் திகதிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை செயலாளருக்கு - கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ
தங்கள் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட, 'யுனொப்ஸ்' நிறுவனத்தின் அனுசரணையுடனான திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான - வரி வசூலிப்பாளர் மற்றும் பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் ஆகிய நியனமனங்களின் போது ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணான பின்வரும் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
01) மேற்படி பதவிகள் பிரதேச சபையின் ஆளணியில் உள்ளடக்கப்படாத போதும், அந் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
02) மேற்படி பதவிகள் நியமனம் தொடர்பாக ஆளுநர் மற்றும் விடய அமைச்சரான முதலமைச்சரின் அனுமதி பெறப்படவில்லை.
03) ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு அமைவாக விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. மேலும், முறையான நேர்முகப்பரீட்சை ஊடாக குறிப்பிட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முற்றிலும் முரணான வகையில் வழங்கப்பட்ட மேற்படி வரி வசூலிப்பாளர் மற்றும் பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் நியமனங்களை உடனடியாக ரத்துச் செய்து, பொருத்தமான ஆட்சேர்ப்புத் திட்டம் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த நியமனங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் - என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையானது மு.காங்கிரசின் நிருவாகத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment