Header Ads



மாடு அறுப்பதற்கு எதிராக கொழும்பில் சத்தியாகிரகத்திற்கு ஏற்பாடு

மாடு அறுப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டை போதி மரத்திற்கு அருகாமையில் சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சிங்கள ராவய அமைப்பு தயாராகின்றது.

கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அக்மீமன தயாரத்தன தேரரர் தெரிவித்தார்.

பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமையை அடுத்தே பசுக்கொலை தொடர்பாக சமூகத்தில் மீண்டும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

2 comments:

  1. நாட்டில் அதிகப்படியான மனநோயாளிகள் சங்கங்கள் உருவாகியுள்ளன என்பது யாவரும் அறிந்தவிடயமே, இவைகளை எண்ணி நாம் கவலைகொள்ளத்தேவையில்லை எதிர்க்கவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்க மாடு அறுக்கும் விடயம்தான் இப்போ ரொம்ப முக்கியம்.

    ஒன்றுமட்டும் உண்மை; அதாவது பெளத்தர்களில் உள்ளவர்களில் ஒட்டுமொத்தமான மொக்குக்கூட்டமெல்லாம் அப்படியே சேர்ந்து சிங்கல ராவய, ஜாதிக ஹெல உறுமய, பொதுபலசேன என்று அப்படியே கூட்டமாக தனியாகிவிட்டார்கள்.

    ReplyDelete
  2. please provide them enough support to stop all murders not only bull all lives in Srilanka

    ReplyDelete

Powered by Blogger.