ஆப்கானிஸ்தானில் மொட்டைமாடியில் வளரும் சிங்கம்
செல்வம் குவியக் குவிய ஊரே வியந்து பார்க்கும்படி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று சிலர் கருதத் தொடங்கி விடுவதுண்டு.
அப்படிப்பட்டவர்கள் பளிங்குக் கல்லால் கட்டப்பட்ட சொகுசு பங்களா, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட கார் ஆகியவற்றை முதலில் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரில் வாழும் முஹம்மது ஷபிக்(42) என்ற தொழிலதிபர் இந்த ஆசைகளுக்கு எல்லாம் மாறுபட்ட வகையில் வீட்டின் மொட்டை மாடியில் சிங்கம் ஒன்றை வளர்த்து வருகிறார்.
'கந்தகார் பகுதியில் உள்ள எனது நண்பர் ஒருவர், என்னிடம் சிங்கம் ஒன்று சிக்கியுள்ளது. வீட்டில் வைத்து வளர்த்துக் கொள்கிறாயா? என்று என்னிடம் கேட்டார்.
இதுவரை டி.வி.யிலும் வனவிலங்கு பூங்காக்களிலும் மட்டும்தான் நான் சிங்கத்தை பார்த்துள்ளேன். என் வீட்டில் சிங்கத்தை வளர்ப்பதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதி உடனடியாக கந்தகாருக்கு புறப்பட்டு சென்றேன்.
சிங்கங்கள் வீரத்தின் அடையாளம். வீரத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.
கந்தகாரில் இருந்து 480 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் என் வீடு சிங்கத்தை வாகனத்தில் ஏற்றி வர 20 ஆயிரம் டாலர்களை செவழித்தேன்.
இறைச்சி கடையில் இருந்து புதிய இறைச்சியை வாங்கி வந்து போட்டு சிங்கத்தை பராமரிக்க ஒரு ஊழியரை நியமித்துள்ளேன்.
இதற்காக மாதம் ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. ஆனால், ஒரு சிங்கத்தை வீட்டில் வளர்க்கிறோம் என்ற கவுரவத்திற்கும், கர்வத்திற்கும் முன்னாள் இந்த செலவு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல' என்கிறார், முஹம்மது ஷபீக்.
Post a Comment