Header Ads



பௌத்த பிக்குவின் தாக்குதலில் ஒருவர் பலி

காலி லபுதுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பிக்கு அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 27 ஆம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், அந்நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. vi

3 comments:

  1. இறந்தவர் முஸ்லிம் இனத்தவர் இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. மிருக வதை கூடாது என்று கொக்கரிக்கிரார்கள்

    ஆனால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக ஆகிவிட்டான்

    ReplyDelete
  3. இதுதான் பௌத்த தர்மத்தின் நீதியா? கொலைகாரர்கள் பவுத்த பிக்கு என்னும் பெயரால் மதிக்கப்பட முடியுமா? கொலைகாரன் யாரயிருந்தாலும் கொலைகாரன்தான், பொது பல சேனா இவனுகளையும் ஊக்குவிக்கிறதா? இல்லையேல் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை!

    ReplyDelete

Powered by Blogger.