ரஷ்யாவில் இப்படியுமொரு நூதனப் போராட்டம்
ரஷ்யாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிளைச் சாலைகள் அனைத்தும் படுமோசமான நிலையில் காணப்படுகின்றன. சாலை வசதிக்கென ஒதுக்கப்படும் நிதி தவறான முறையில் கையாளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, ரஷ்யாவின் சாலைகள் இருக்கும் நிலையை உலக ஊடகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக நூதனப் போராட்டங்களில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நள்ளிரவில் மாஸ்கோ நகரில் உள்ள சாலை பள்ளங்கள் 'பளிச்' என்று தெரிவதற்காக அவற்றின் விட்டத்தை பெயிண்ட் அடித்து அடையாளப்படுத்தினர். மே மாதம், பூச்செடிகளை நட்டு சாலை பள்ளங்களை அழகுப்படுத்தினர்.
இதன் உச்சகட்டமாக, மத்திய ரஷ்யாவில் உள்ள யரோஸ்லாவ்ல் நெடுஞ்சாலைகளை நேற்று முன்தினம் ஆக்கிரமித்த நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், சாலை பள்ளங்களில் உருளைக்கிழங்குகளை நட்டு அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நட்ட உருளைக் கிழங்கு முதலில் முளைக்கிறதா? அல்லது, சாலை பள்ளங்கள் முன்னதாக மூடப்படுமா? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தங்களது போராட்டத்தை புகைப்படமாக எடுத்து நகர மேயருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அறிவுப்புர்வமான போராட்டம் அரசாங்கம் வெட்கித்தலைகுனியவே வேண்டும்.
ReplyDelete