Header Ads



மாத்தறையில் பொலிஸார் - பொதுமக்கள் மோதல்

மாத்தறை திக்வெல்ல பகுதியில் மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 17 உத்தியோகத்தர்களுக்கு தறகாலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த சிலர் பெரஹரா ஒத்திகை நடத்தியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஒத்திகையால் தாம் அசெளகரியத்தை எதிர்நோக்குவதாக பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொலிசாரிடம் சென்று முறையிடாமல் பொது பல சேனாவிடமா சென்று முறையிடுவது?

    முறைப்பாட்டைப் பெற்ற பொலிசார் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதோடு அவர்களின் நடுநிலையான அவதானிப்புக்களையும் மேற்கொண்டல்லவா தமது கடமையைச் செய்ய வேண்டும்?

    இதென்ன பொதுமக்களுடன் முரண்படும் புதுவிதமான செயற்பாடு?

    பொலிஸ் தரப்பில் தவறு இருந்தபடியால்தான் 17 பொலீசாரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இப்படி தவறிழைத்த பொலிசாருக்கு இடமாற்றம் வழங்குவது சரியான தண்டனையாகுமா? அவர்கள் திக்வெல்லையில் இருந்தாலென்ன திருகோணமலைக்குச் சென்றாலென்ன.. பொலிசாராகவே பதவியில் இருப்பார்கள்.

    இவ்வாறு இடமாற்றுவது புடவைக்கு மேலால் சொறிவது போலாகுமே தவிர தோலில் சொறிந்து தினவைத் தீர்த்ததாக இருக்காது.

    நாட்டில் சிவில் சமூகங்களுக்குப் பாதுகாப்பளித்து சட்டத்தையும், அமைதி ஒழுங்கையும் பேண வேண்டிய பொலீஸார் தொடர்ந்தும் இப்படியெல்லாம் சண்டித்தனமான முறையில் பொதுமக்களுடன் முரண்பட்டுக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல.

    நாட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் அது பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பில் இருந்தே உருவாக வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் சட்டத்தையும் அமைதி ஒழுங்கையும் பின்பற்றி வாழுமாறு அவர்களால் வலியுறுத்தவும் முடியும்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.