Header Ads



கல்முனை நகர அபிவிருத்தி குறித்து முபாறக் மௌலவியின் விமர்சனம்

கல்முனை திதுலன வெளிச்ச ஏற்பாட்டின் போது கல்முனையின் உலமா சபைக்கோ முஹம்மதிய்யா தவ்ஹீத் பள்ளிவாயலுக்கோ எதுவித நிதியும் வழங்காமல் புறக்கனித்தமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

    அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கல்முனை திதுலன என்ற அபிவிருத்தித்திட்ட நிகழ்வுகள் சம்பந்தமான விபரத்தில் கல்முனை உலமா சபைக்கென ஒரு காரியாலயத்தை கட்டுவதற்குரிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை கல்முனை மாநகர எல்லக்குள் வாழும் உலமாக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய அநியாயமாகும்.

கிழக்கு முஸ்லிம்களின் தலைநகராக விளங்கிய கல்முனை உலமா சபைக்கென இதுகாலவரை ஒரு தனியான காரியாலயம் இல்லை என்பதை கடந்த பத்து வருடங்களாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனாலும் இதுவரை மக்கள் வாக்குகள் பெற்ற அரசியல்வாதிகள் இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் கடந்த கால தேர்தல்களில் கல்முனை உலமா சபையை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களாக செயற்பட்டதோடு அவர்களின் மேடைகளில் கிறாஅத், துஆ ஓதுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். அப்படியிருந்தும் கல்முனை வெளிச்சமடையும் போது கல்முனை உலமா சபையை தொடர்ந்தும் இருட்டில் விட்டுள்ளமை மிகப்பெரிய அநியாயமாகும்.

அதே போல கல்முனை வரலாற்றில் முதலாவது ஜும்ஆ பள்ளிவாயலாக அரசாங்கத்தில் பதியப்பெற்ற முஹம்மதிய்யா பள்ளிவாயலுக்கும் எது வித நிதியுதவியும் வழங்குவதாக நிகழ்ச்சித்திட்டத்தில் இல்லை. இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களான இப்பள்ளியை சேர்ந்தோருக்கும் அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதோடு இவ்வாறான ஓரங்கட்டலினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரின் நன்றி கெட்ட குனம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணம் சிலருக்கு மட்டும் என தெரிய வருவதுடன் அப்பணத்தை குறிப்பிட்ட சில ஆதவாளர்களது நலனைக்கொண்டு செயற்படுவதன் மூலம் ஊழல் மோசடிக்கு வழிவகுக்கலாமென அஞ்சுகிறோம்.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது மேற்படி முஹம்மதிய்யா பள்ளிவாயலை சேர்ந்தோரில் 90 வீதமானோர் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நிசாம் காரியப்பக்கு வாக்களித்தனர். அதே போல் 98 வீதமானோர் கடந்த பொதுத்தேர்pலில் ஹரீசுக்கே வாக்களித்தனர்.

    இவ்வாறிருந்தும் மேற்படி பள்ளிவாயலும், உலமா சபையும் ஓரங்கட்டப்பட்டமை கண்டிப்புக்குரியதாகும். இத்தகைய நன்றி கெட்டவர்கள் பின்னால் இனியும் நிற்பதா என்பதை இனியாவது மேற்படி பள்ளிவாயல் ஆதரவாளர்களும், கல்முனை உலமா சபையும் சிந்திக்க வேண்டும்.

5 comments:

  1. மௌலவி அவர்களே உங்கள் ஆதங்கம் புரிந்தாலும்.....நமதூர் வரகவி மர்ஹூம் இலங்க மஸ்தான் பாணியில் சொல்வதென்றால் யார் யார் உலமாக்களாக இருக்கின்றனர் எல்லோருமே உலஹாக்களாக தானே உள்ளனர், நீங்களும் அதற்க்கு விதி விலக்கில்லையே ....ஊருக்கொரு பள்ளிவாசல் என்று நிதி ஒதுக்கி இருக்கலாம் ....ஊருக்கொரு ஆசுபத்திரி என்றால் மர்ஹூம் தலைவர் பெயர் கொண்ட வைத்தியசாலைக்கு ஒரு ரூபாயும் இல்லையே ...இதை யாரிடம் முறை இடுவது....ஆனால் அக்கரைப்பற்று அதாவோ அவரது ஊர் ஆசுபத்திரிக்கு 65 மில்லியன் ஒதுக்கி அதன் அபிவிருத்தி துரிதமாக நிறைவேறி வருவதும் இங்கு குறிப்பிட தக்கது.

    ReplyDelete
    Replies
    1. Brother meenawan awarkele! Atha. . 65million othukkinatha sonninkela ithil awerudaiya panku etthenai million entu visarithu parthingala?

      Delete
  2. நமது உலமாக்களா.. சிந்திப்பதா...?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. சகோ.Mohamed Wareef தாங்கள் எதிர்பார்க்கும் அவருடைய பங்கு என்பது அவரது சொந்த பணமல்ல...ஆனால் தேயட குருள நிதி ஒதுக்கீடு ....ஆனால் தம்பி ஹரிசின் தேயட குருல ஒதுக்கீடு ...??? இப்போது தான் ஒளிரும் கல்முனை51 திட்டத்திக்கு பயன்படுகிறதா ??? அப்படி என்றால் ஞாபகார்த்த ஆசுபத்திரி....??? இன்னுமொன்றையும் சொல்லாலாம் அதாவுக்கு ஒதுக்கப்பட்ட தேயட கிருல 70மில்லியனில் ஏனைய அபிவிருத்திக்கு வெறும் 10மில்லியன்... ஆசுபத்திரி 65 மில்லியன் உடனடியாகவே அங்கீகரிக்கப்பட எங்கள் தம்பியின் மீன் வாடி,,வீதி ,மற்றும் சில்லறை திட்டங்கள் நிராகரிகபட்டது ..இது யதார்த்தம் முடிந்தால் எம்.பி.தம்பியிடமும் அமைச்சர் அதாவிடமும் விசாரித்து பாருங்கள்

    ReplyDelete

Powered by Blogger.