Header Ads



ராஜபக்ஸ சகோதரர்களின் அசீர்வாதம் பொதுபல சேனாவுக்கு உண்டு - அமைச்சர் ராஜித

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இனவாத விஷத்தைக் கக்கி வரும் பொதுபல சேனாவிற்கு ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆசீர்வாதம் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்தின பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பௌத்த மதக் கோட்பாட்டின் படி வணங்கத்தக்கவயாகவும், வழிகாட்டியாக கொள்ளத்தக்கவையாகவும் இருப்பவை, புத்தர், அவரது போதனைகள் அடங்கிய தம்மபத, இவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பிக்குமார் ஆகிய மூன்று விடயங்களாகும்.

இவற்றை மும்மணிகள் (துன்ருவன்) என்று பௌத்த மக்கள் அழைப்பர். ஒருவரை ஆசீர்வதிக்கும் போது மும்மணிகளின் ஆசிகிட்டுவதாக (துன்ருவன் சரணய்) என்று ஆசீர்வதிப்பது வழக்கம். ஆனால் பொதுபல சேனா இந்த மும்மணிகளுக்குப் பதில் பஞ்சமணிகளைப் பின்பற்றுவதாகவும், அந்த பஞ்ச மணிகள் என்பது மஹிந்த ராஜபக்ஷ, சமல் , நாமல் மற்றும் கோத்தபாய, பசில் ஆகியோரே ஆகும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பெதுபலசோனவிற்கு அரச ஆதரவு இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட அரச தரப்பினர் மறுத்து வந்த போதிலும், அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ள இந்தக் கூற்றின் மூலம் உண்மை வெளிப்பட்டுள்ளது.

காலி குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்தின,

பௌத்த மதம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. பௌத்த தேரர்கள் என்போர் சாந்த சொரூபிகளாக இருக்க வேண்டும். ஆனால் இன்று ஒருசில பௌத்த தேரர்கள் பேய்கள், அரக்கர்களைப் போன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முனைகின்றனர்.

மேலும் இவர்கள் பௌத்த மத கோட்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதைச் செய், இதைச் செய் என்று அடிக்கடி ஜனாதிபதியிடம் ஓடிவந்து வேண்டுகோள் வைக்கின்றனர். பௌத்த தேரர்கள் யாரிடமும் மண்டியிடக் கூடாது. ஆனால் இவர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் மண்டியிட்டுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால் புத்தங் சரணங் கச்சாமி என்று சொல்வதற்குப் பதில் மஹிந்த சரணங் கச்சாமி, நாமல் சரணங் கச்சாமி, சமல் சரணங் கச்சாமி என்று சொல்லவும் செய்வார்கள் போலிருக்கிறது. அதன் பின் கோத்தபாய சரணங் கச்சாமி, பசில் சரணங் கச்சாமி என்று சொல்வதற்கு அதிக நேரம் எடுக்காது.

இப்படியானவர்கள் நான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதால் எனது அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சூளுரைத்துள்ளனர்.

இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. அமைச்சர் பதவி என்பது ஒரு பொறுப்பு தானே தவிர அலங்காரம் கிடையாது. அமைச்சர் பதவி இல்லாமல் போனாலும் மக்கள் சேவையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.

20 comments:

  1. Very strong speech! mail a copy of the same to Muslim Politicians who are trying to white wash the President and the Defense Secretary.

    ReplyDelete
  2. மானமுள்ள மனிதர் . எச்சில் உண்ணும் நாய்களுக்கு இச்செய்தி சமர்ப்பணம் .

    ReplyDelete
  3. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களே, இறைவன் உங்களை நேர்வழிப் படுத்துவானாக! ஆமீன்.

    எங்கே முஸ்லிம்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் என சொல்லும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்..........கிழிந்து விட்டதோ உங்கள் முகமூடிகள் ?

    நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்த அநியாங்களை நினைத்து , போலி நாடகங்களை நினைத்து, பெற்ற சலுகைகளை நினைத்து ...........நினைத்துப் பாருங்கள் இன்று உங்களை மரணம் வந்தடைந்தால் மனிதர்களுக்கு செய்த அநியாங்களை யாரிடம் சென்று கழுவுவீர்கள், பயந்து கொள்ளுங்கள் உங்கள் விசாரணை நாளை எண்ணி.

    உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்பி, எழுதினேன். என்னையும் மன்னித்து விடுங்கள் .

    இறைவா எங்கள் பாவங்களை மன்னித்து இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவாயாக . ஆமீன்.

    ReplyDelete
  4. THANK YOU HON.MINISTER RAJITHA SENAARATHNA FOR YOUR GOOD SPEECH.

    ReplyDelete
  5. THANK YOU HON.MINISTER RAAJITHA SENARATNA.

    ReplyDelete
  6. Nice leadership, our leaders must learn from him, not to surrender to mahinda n co.

    ReplyDelete
  7. in sha Allah you will long live

    ReplyDelete
  8. thank you dr rajitha senaraththa [allah akbar[

    ReplyDelete
  9. You are the real thesapramee. Thank you so much Dr.Rajitha Senaratna

    ReplyDelete
  10. at least a cabinet minister open his mouth against terrorists & terrorism...

    ReplyDelete
  11. தேங்க்ஸ் ராஜித சார் , உங்கள் பலம் ஓங்கிவிட்டது

    ReplyDelete
  12. mahinda and company thaan thodarnthu aadsi seivaarhaloo.... ivarhal seium kaalam malaraddum.

    ReplyDelete
  13. Really Great while our muslim leaders are bow the government one none muslim talking about us, really happy to here thanks

    ReplyDelete
  14. அஸ்வர் காதர் ஹகீம் பவ்ஸி மவ்லானா பசீர் ஹிஸ்புல்லா முஸ்தபா அதா ரிசாட் மற்றும் எல்லோரும் ராஜித வாசுதேவ திஸ்ஸ டயூ ஜனக பன்டார போனறோர்களின் சிறு நீரக் குடிங்க.
    அல்லாஹ் கூறுகிறான் இஸ்லாத்தை நான் அன்னியரைக் கொண்டாவது காப்பாற்றுவேன் என்று அது இது தானோ?

    ReplyDelete
  15. உங்களுக்கு இறைவன் நேர்வழிகாடட்டும். உலகில் அநியாயக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாப்பு கிடைகட்டும்.

    ReplyDelete
  16. DR Rajitha minister very good PERSON Mahadi hassan say true words follow our muslim minister thanks and lot Dr Rajitha minster and mahadi

    ReplyDelete
  17. Hi Friends,

    இதுவரையில் அமைச்சர் திரு.ராஜித சேனரத்ன அவர்களை வாழ்த்தி ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட வாழ்த்துப் பின்னூட்டங்கள் நம்மவர்களால் எழுதப்பட்டுள்ளன. இத்தனைக்கும் அவர் முஸ்லீம் அல்லாதவர். இன்னும் கூறினால் இதுவரையில் கலீமா கூறாதவர். இன்னும் பச்சையாகக் கூறினால் அவர் ஒரு இறைமறுப்பாளர். (அதாவது நமது இறைவனாகிய அல்லாஹ்வை)...etc..etc.

    இப்படியான ஒரு மனிதருக்கு அதுவும் இன்று நமது நாட்டில் பெரும்பான்மை இனத்தவரில் சிறுபகுதியினர் நம்மோடு எதிர்ப்புணர்வு கொண்டு செயற்பட்டுவரும் நிலையிலே அவரும் ஒரு சிங்கள பௌத்தர் என்பதையெல்லாம் மீறி அவருக்கு இத்தனை பாராட்டுக்கள் குவிகின்றமை எதற்காக என்று சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே!

    அவை அனைத்தும் அவரது துணிச்சலான கருத்துகளுக்காகத்தான்!

    நமது மக்களுக்கு எதிராக தவறான காரியங்களைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் தனது சொந்த இனத்தவர்களாக இருந்தபோதிலும் தன்னுடைய மனசாட்சியின் வழிநின்று அதனை எடைபோட்டு தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றார் திரு. ராஜித சேனரத்ன அவர்கள்.

    அவர் தற்போதைய தவறான போக்குகளின் பின்னணியிலே மறைந்திருக்கும் தனது அரசியல் ஆட்சிபீடத்தினரின் அதிகாரபலம் மற்றும் எதையும் சாதிக்கக்கூடிய சக்தி யாவற்றையும் நன்கறிந்திருந்தும் கூட தார்மீக உணர்வுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். அதிகார மனிதர்களுக்கு அஞ்சாமல் அவர்களை தோலுரித்து அம்பலப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் முழுநாட்டு மக்களுக்கும் நேர்மையாக நடந்து கொண்டிருக்கின்றார்.

    இதற்காகத்தானே நாம் அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றோம்.

    அதேவேளை நமது கலிமா மொழிந்தவர்களான கோட் சூட் டை குர்தா மற்றும் சர்வானி அரசியல்வாதிகள் இதுவரை காலமும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.. இத்தனை அநியாயங்கள் நடந்தகொண்டிருந்தும் கூட வாயே திறவாமல் தமது ஆட்சிபீட எஜமானர் கால்களிலே எப்படியெல்லாம் சுருண்டு படுத்திருக்கின்றார்கள் என்பதை நாமறிவோம்.

    ஆக, ஒரு முஸ்லீம் அல்லாத அரசியல்வாதி நெஞ்சுக்கு நீதியாக துணிந்து தன் இனத்தவர்களையும் ஆட்சிபீடத்தையுமே எதிர்த்து நிமிர்ந்து நிற்கின்றார். ஆனால் இறைவனைத் தவிர வேறுயாருக்கும் அடிபணியமாட்டோம் என்று நிற்கவேண்டிய நம்மவர்கள் ஒரு தனிமனிதனின் காலடியிலே சுருண்டு சுரணையற்றுக் கிடக்கின்றார்கள்..!

    இப்போது கூறுங்கள்...

    ஒரு மனிதனை அவனது மத அடையாளத்தையோ இன அடையாளத்தையோ கொண்டு சிறந்தவன் என்று சொல்வது சரியா அல்லது அவனது செயற்பாடுகளை வைத்து சிறந்தவன் என்று சொல்வது சரியா? Tell me!

    ReplyDelete

Powered by Blogger.