Header Ads



ஜனாதிபதி மஹிந்தவின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள சொகுசு கெலிஹெப்டர் (படம்)


Mi 171-E VIP சொகுசு சொகுசு கெலிஹெப்டரின் உட்புறம்
ரஸ்யாவில் இருந்து ஆறு எம்,ஐ -171 உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.  இரண்டு இராட்சத அன்ரனோவ்-124 விமானங்களில் இந்த உலங்கு வானூர்திகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

2010ம் ஆண்டில் இலங்கைக்கு ரஸ்யா வழங்கிய 350 மில்லியன் டொலர் கடனுதவியில் இருந்து, 14 உலங்குவானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் ஆறு உலங்குவானூர்திகளே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு ஏ.என்-124 இராட்சத விமானங்களும் தலா 3 உலங்கு வானூர்திகளை ஏற்றி வந்தன. 

இவற்றில் இரண்டு உலங்குவானூர்திகள் Mi 171-E VIP ரகத்தைச் சேர்ந்தவையாகும்.  செய்மதி தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட, எட்டு பயணிகள் மற்றும் விமானிகளை ஏற்றிச் செல்லும் திறன்கொண்ட இவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்  பயணத்துக்கான அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஏனைய நான்கு உலங்கு வானூர்திகளும் Mi 171-SH ரகத்தைச் சேர்ந்தவை. இவை விமானப்படைக்கு வழங்கப்பட்டவுள்ளன. 

மேலும் எட்டு Mi-171 துருப்புக்காவி உலங்குவானூர்திகள் விரைவில் விநியோகிக்கப்படும்.  இந்த உலங்குவானூர்திகளை ஒருங்கிணைப்பதற்காக ரஸ்யாவில் இருந்து பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் கொழும்பு வந்துள்ளனர். 

இவர்கள் உலங்குவானூர்திகளை பொருத்தி, சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இலங்கை விமானப்படையிடம் முறைப்படி ஒப்படைக்கவுள்ளனர்.

3 comments:

  1. ஜனாதிபதிக்கு அவசியமானதொன்றுதான் ஆனால் நாட்டின் நிலைமையையும் மக்களின் நிலைமையையும் பார்க்கும்போது இதுபோன்ற ஆடம்பரமான விடயங்களை தேவைதானா என்று சிந்திக்கத்தோன்றுகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நம் ஒவ்வொருவரின் பணமும் இப்படிபறிக்கப்படுகின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம் நமக்குத்தெரியாமலே நம் உழைப்பும் பணமும் நம் கைகளாலேயே பறிகொடுத்தவண்ணமுள்ளோம்.. இந்தக்கொடுமைக்குத்தான் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் எப்போது வரும் என்றது எமது ஆதங்கம்....

    ReplyDelete
  2. ஐயா.. நாட்டின் தலைவரே..! உமது பரிபாலனத்திலுள்ள நாம் தலைக்கு 300,000 ரூபா வெளிநாட்டுக் கடனில் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாம் ஓட்டிச் செல்கின்ற சாதாரண சைக்கிளுக்கு டயர் மாற்றக் கூட முடியாத நிலையில் இருக்கும்போது, உமக்கு இந்த சொகுசு ஹெலியெல்லாம் புலிகள் இல்லாத நாட்டில் இன்னமும் தேவையா..?

    'ஆடம்பரத்திற்கும், மோட்சத்திகும் ரொம்பத் தூரம்'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. நாடு பற்றி எரியும் பொது புலான்குழல் வாசித்தானாம் நீரோ மன்னன்....யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி நிலவினாலும் ...வாழ்க்கை செலவோ வானை தொட்டுவிட்ட நிலையில் 350 மில்லியன் டொலர் கடனில் தேவைதானா ..இந்த சொகுசு எதுவாயினும் வரியை சுமப்பவ்ர்கள் ...பொதுஜனம் தான்.

    ReplyDelete

Powered by Blogger.