மகாத்மா காந்தியடிகளின் சிந்தனையில், முஹம்மது (ஸல்)
(தமிழாக்கம்: அவ்பர் முஸ்தபா)
மகாத்மா காந்தி அவர்களின் பத்திரிகையான 'யங் இந்தியா, வில் '1924 ல்., அவர் வெளியிட்ட அறிக்கை:
“முஹம்மத் நபியவர்கள் “கோடிக்கணக்கான மக்களின் மனக்களைக் கவர்ந்து அவர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் ஒரு மாகான்; என்பது யாருமே மறுக்கவியலாத ஒரு உண்மை.
இவர் வாழ்வின் அதி சிறப்பான பக்கங்களை அறிய ஆர்வங்கொண்டு அவரின் சுயசரிதை படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. அறிய அறிய உண்மை விரிவாய்த் தெரிய வந்தது.
இஸ்லாத்தின் வெற்றிக்குப் பின் வாள் இருக்கவேயில்லை, அதன் வடிவான வாழ்வியல் மட்டுமே இருந்திருக்கிறது. என்பதை அறிந்து கொண்டேன்; அதாவது, வெற்றிக்கான காரணிகளாவன,
நபிபெருமானிடம் இருந்த,
1. உறுதியான, உச்சமான எளிமை,
2. உண்மையான, தன்னலமற்ற தனிப்பட்ட தன்மை,
3. அறவே அகம்பாவமில்லாத இனிய இயல்பு,
4. உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும், கடைப்பிடிப்பதிலும் இருந்த மகத்தான பண்பு,
5. தோழர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் அவருக்கு இருத்த ஈடுபாடும் ஆழமான அன்பும்.
6. எடுத்த வேலையைச் செம்மையாகச் செய்ய, ஆபத்துக்களை, அதன் அடிவரைக்கும் சென்று சந்தித்த அவரின் மன வலிமை,
7. அவரது ஆண்மையும், ஆளுமையும், வீழ்ச்சி பெறாத வீரமும்,
8. இறைவனிலும் அவர் எடுத்துக்கொண்ட பணியிலும் அவருக்கிருந்த ஆட்டிப்பார்க்கவே முடியாத ஆழமூன்றிய நம்பிக்கை.
போன்ற, இத்தகைய தன்மைகளையெல்லாம் தன்னகத்தே இயல்பாகவே கொண்டிருந்ததால்தான், அத்தனை கடினமான பாதைகளைக் கடந்து வெற்றியைத் தொட்டிருக்கிறார், நபி பெருமான் அவர்கள்.
ஆகவே வாள்களுக்கும் நபியவர்களின் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கவேயில்லை.”
நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின், இரண்டாவது பகுதியைப் படித்து முடித்து மூடும் போது;
“இத்தனை சிறப்பான இந்த வாழ்க்கையை இன்னும் தெரிந்துகொள்ள; எனக்கு தகவல்கள் போதவில்லையே என வருந்துகிறேன்” என்று சொல்லி முடித்தார்
.........................................................................................................................................
மகாத்மா காந்தி: உமர் (ரழி) அவர்கள் பற்றிக் கூறியது.
ஹழ்ரத் உமர் (ரழி) அவர்களைப் போன்ற, நேர்மையானதும், நேரானதுமானதுமான, ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் இந்தியாவை ஆட்சிசெய்தால் மட்டுமே, இந்தியாவை மேம்படுத்த முடியும்.
Post a Comment