Header Ads



ஜனாதிபதியின் ஆலோசனை எனக்கு பொருந்தாது, அடிபணியவும் மாட்டேன் - அமைச்சர் வாசு

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க தனக்கு எந்த எண்ணமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல எனவும் தான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். vi

5 comments:

  1. ஜனாதிபதியும் அவரது சகோதரரும் மற்றவர்களை பயமுறுத்தி அவர்களுக்கு அடிபணியவைத்துள்ளது ஏற்கனவே பேசப்பட்டவைதான் ஆனால் அதற்கு எல்லோரும் தலைசாய்க்க முடியாது முதுகெலும்பில்லாதவர்கள், தவறுசெய்த்டுவிட்டு ஆதாரங்களுடன் சிக்கியவர்கள் வேண்டுமானால் இவர்களின் பயமுறுத்தலுக்கோ அறிவுறுத்தலுக்கோ கட்டுப்படலாம். மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க விரும்பாதவர்கள் எப்போதும் தலை நிமிர்ந்து வாழலாம் என்பதற்கு வாசு ஐயா போன்றவர்கள் நல்லதோர் உதாரணமாக அமையட்டும் மற்றவர்கள் பார்த்து வெட்கப்படட்டும்.

    ReplyDelete
  2. அரசியல் செய்வதற்கு பொருத்தமான தலைவர் .

    ReplyDelete
  3. Your the Great Sri lankan Gentelman Poltician

    ReplyDelete
  4. You are the Real Poltician in Sri Lanka.Please make more like you.You are the Gentleman.

    ReplyDelete
  5. oyavage ekkanata vitharai ahanna puluvam because obathumage thurumbuwa mokuth nehe ape very pracydangawa?

    ReplyDelete

Powered by Blogger.