Header Ads



அமைச்சரவை கூட்டத்தில் தர்க்கப்பட்ட ரவூப் ஹக்கீம்

அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதிமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்பை ஏற்படுத்தி அமைச்சரவையில் நடைபெற்ற அரசியலமைப்பின் 13 சட்டத்திருத்தம் தொடர்பிலான சொற்போர் குறித்து கேட்டது. இதன்பொது ரவூப் ஹக்கீம் கூறிய விடயங்கள் கீழ்வருமாறு,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்க கூடாதென்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை விளக்கி நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஏற்கனவே கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளோம்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். அதாவது மாகாணங்களுக்கான அதிகாரங்களை குறைக்ககூடாதென வாதிட்டோம். ஒரு கட்டத்தில் மாகாணங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரங்களை நான் எதிர்த்தேன். அந்த அதிகாரம் பாரளுமன்றத்திடமே காணப்பட வேண்டுமென வாதிட்டேன். இதன்போது குறிக்கிட்ட ஜனாதிபதி மஹிந்த பாராளுமன்றத்தில் தமக்கு எப்போதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லையென கூறினார். அதற்கு நான் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன்தான நீங்கள் இப்போது அந்த பெரும்பான்மையை பெற்றுள்ளீர்கள் என்று சுட்டிக்காட்டினேன்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மாகாண அதிகாரங்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு உடனுக்குடன், சூடாக பதில் வழங்க கூடியதாக இருந்தது. குறிப்பாக இடதுசாரி அமைச்சர்களும், அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவும் மாகாண அதிகாரங்களை குறைப்பதற்கு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர் எனவும் ரவூப் எமது இணையத்திடம் தெரிவித்தார்.

அதேவேளை இந்த அமைச்சரவை கூட்டம் கடும் வாக்குவாதங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடதுசாரி அமைச்சர்களுக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் கடும் பொற்போர் மூண்டுள்ளது. ஒருகட்டத்தில் அமைச்சர் டி.யூ. குணசேகர அமைச்சர் விமல் வீரவன்சவை நோக்கி 'நீ என்னை கொல்ல வந்தவன்தானே..: எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபக்கம் மாகாணங்களிடமிருந்து அதிகாரங்களை எவ்வகையிலும் பிடுங்கக் கூடாதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அழுத்தமாக வாதிட்டுள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மாகாணங்களுக்கு ஆதரவாக  வாதாடியவர்களில் பிரதானமானவர் அமைச்சர் வாசுவே என அறியமுடிகிறது.

2 comments:

  1. Okay guys you done a good job, there was an improvements in your task, take rest we will see the result.

    ReplyDelete
  2. சகோதரர் ரஊப் ஹக்கீமின் இந்த பேச்சு முஸ்லிம் களின் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

    அதாஉல்லாஹ் அரசாங்கம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு ஆதரவு என்று இருக்கும் பொழுது ரஊப் ஹக்கீமின் அமைச்சரவையில் பேசிய கார சாரமான பேச்சுக்கு நாம் அவருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும், இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் இல் இருக்கும் பராளுமன்ற உருப்பினர;ர்களின் முடிவிலேயே தங்கியுள்ளது.

    அரசாங்கம் எப்படியோ இந்த 13 வது திருத்த சட்டத்தினை வெற்றிபெற வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் களை (முஸ்லிம் காங்கிரஸ்) விலை கொடுத்தாவது வேண்டியே தீரும்....

    இருப்பினும் பொருது இருந்து பாப்போம் ..

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிகிறதா இல்லை எதிர்கிறதா ? என்று ....

    கடைசியாக சகோதரர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு ''நன்றி'' கூறி அவரின் முடிவில் இருந்து அவர் மாறாமல் இருக்க வேண்டும் என எம் சமூகம் எதிர்பார்க்கிறது

    ReplyDelete

Powered by Blogger.