துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடருகிறது (வீடியோ)
துருக்கியில், அரசுக்கு எதிராக, நான்காவது நாளாக நேற்றும், தொடர் போராட்டம் நடந்தது. தடையை மீறி போராட்டம் நடத்திய, 1,700 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
துருக்கி தலைநகர் அங்காராவில், வணிக வளாகம் கட்ட, அரசு திட்டமிட்டது. இதற்கு சுற்றுச் சூழல் அமைப்பினர் எதிர்த்தனர். சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஆதரவாக, இளைஞர்கள் பலர் இஸ்தான்புல் நகரின், தக்சிம் சதுக்கத்தில், கடந்த வாரத்திலிருந்து தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியது. வாகனங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன; கடைகள் எரிக்கப்பட்டன. வன்முறையாளர்களை ஒடுக்க, போலீசார் நடத்திய தாக்குதலில், போராட்டக்காரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய, 1,700 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, அங்காரா, இஸ்தான்புல் உள்ளிட்ட, துருக்கியின் முக்கிய நகரங்களில் போராட்டம் பரவியது. தக்சிம் சதுக்கத்தை விட்டு போராட்டக்காரர்கள் நகர மறுத்தனர். போலீசார் அந்த இடத்தை விட்டு சென்றால் தான், போராட்டத்தை கைவிடுவோம் என. ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். இதையடுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தப் படுத்தப்பட்டனர். "பழமைவாத கருத்துகளை பிரதமர் திணிக் கிறார்; சர்வாதிகாரி போல செயல்படுகிறார், எனவே, அவர் பதவி விலக வேண்டும்' என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்தக் கருத்தை, பிரதமர் தயீப் எர்டோகன் மறுத்துள்ளார். போராட்டக்காரர்கள் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டதால் தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்து உள்ளார். இருப்பினும், போலீஸ் தடையை மீறி, போராட்டக்காரர்கள், அங்காரா, இஸ்தான்புல் உள்ளிட்ட நகரங்களில் நேற்று, கண்டன ஊர்வலம் நடத்தினர்.
யூதர்களின் சூழ்ச்சியில் மீண்டும் ஒரு அமைதிப்பூங்காவில் இரத்த ஆறூ ஓட ஆரம்பிக்கிறது... சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதற்கான தீர்வை வழங்கவேண்டும்....
ReplyDelete