Header Ads



ஆசிரியர்கள் கற்பித்தலின் போது தொலைபேசியை நிறுத்தவேண்டும் - பெற்றோர் வேண்டுகோள்

(அப்துல்சலாம் யாசீம்) 

மாணவர்களுக்கு கல்வி கற்பிற்கும் நேரங்களில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசி பாவிப்பதை நிறுத்த வேண்டும் என பெற்றோர்கள் ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலத்தின் அதிபர் எம்.கே.உவைஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர்,ஆசிரியர் சங்க கூட்டம் நேற்று 11-06-2013 பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும் அக்கூட்டத்தில் பெற்றோர் ஒருவர் கருத்துத்தெரிவிக்கையில்,

தனது பிள்ளை பற்றிய விபரங்களை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது வகுப்பு ஆசிரியர் தான் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவதானித்தேன். அவர் 20 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் ஒரு பாடத்திற்குறிய நேரம் 35 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அதில் 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படலாம் எனவும் தெரித்தனர்.

எனவே ஆசிரியர்கள் வகுப்பு நேரங்களில் மாத்திரம் கைத்தொலைபேசி பாவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. Hi Friends,

    பாடசாலை நேரங்களிலே ஆசிரியர்கள் தொலைபேசுவதை மட்டும் தனியே ஒரு தவறாக தனிமைப்படுத்திப் பார்க்காமல் சற்று விரிவாக ஆராய்வோம்.

    பழைய ஆசிரியர்களை ஒருநிமிடம் நினைத்துப் பாருங்கள். மனதுக்குள் எத்தனை மரியாதையும் பெருமிதமும் எழுகின்றது. அப்படியானவர்கள் இப்போது ஓய்வுபெற்று விட்டார்கள் அல்லது ஒவ்வொருவராக ஓய்வுபெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இது நிச்சயம் நமது இளம்தலைமுறைக்கும் நமக்கும் இழப்புதான்-ஆனால் தவிர்க்க முடியாத இழப்பு.

    அதேவேளை இன்று கடமையிலிருக்கும் ஆசிரியர்களை நினைத்தால்...

    ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு இன்றிருப்பதைவிட சமூகத்திலே மிகுந்த மதிப்பும் மரியாதையுமிருந்தன. அவற்றுக்குக் காரணம் அவர்களது படிப்பு மட்டுமல்ல அவர்கள் தங்களது சேவைத்தொழிலுக்கு ஏற்ற தகுதியையும் பண்பு விழுமியங்களையும் கொண்டிருந்தார்கள். தவிர பொருளாதார ரீதியிலும் ஓரளவு செல்வாக்கு மிக்கவர்களாகவும் பிறரைத் துதிபாடி வழவேண்டிய அவசியமில்லாத வகையிலும் இருந்தனர். அந்தளவுக்கு அவர்களக்குரிய வேதனமும் இருந்தது.

    ஆனால் இன்று...

    ஆசிரியத்தொழில் அதற்குரிய கௌரவத்தையும் மகிமையையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கின்றது. இதற்கு தனியே இன்றைய ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல. ஆசிரியர்களை போட்டிப்பரீட்சைகள் மூலம் தெரிவு செய்துகொண்டிருந்த காலத்தில் 1990களில் நமது நாட்டின் உச்ச அதிகாரத்திலிருந்த ஒரு அரசியல்வாதி திடீரென 'பயிற்சி ஆசிரியர்கள்' எனும் திட்டத்தை கொண்டுவந்து ஆசிரியத்துவத்தையே நாசம் செய்தார். அவரது ஆளணித்திட்டத்தால் குறைவான நெல்மணிகளும் அதிகமான பதர்களும் ஆசிரியர் சமூகத்தில் வந்து சேர்ந்தார்கள்.

    அன்று ஆரம்பித்தது நாசம்.

    ஆசிரியர்களுக்குரிய கல்வித்தகைமைகளும் போதாமல் இறுக்கமானதும் முறையானதுமான கலாசாலைப் பயிற்சிகளுமில்லாமல் இந்த நாட்டின் எதிர்கால கல்விமான்களைத் தீர்மானிக்கும் பொறுப்புகளுக்கு பலர் நியமிக்கப்பட்டார்கள். தாய்மொழியிலேயே எழுத்துப்பிழையின்றியே எழுதத்தெரியாத மொழியாசிரியர்கள், தீராத பல சந்தேகங்களுடன் கணக்குப்போடும் கணித ஆசிரியர்கள், நுளம்புகள் முட்டையிடுவது எங்கே என்று அறியாத விஞ்ஞான ஆசிரியர்கள், ஆங்கிலத்தை சரளமாகப் பேசத்தெரியாத ஆங்கில ஆசிரியர்கள் என்று பதர்கள் பல்கிப்பெருகின.

    அவர்களால் இரண்டு தலைமுறை மாணவர்களில் கணிசமானோர் முறையான மொழி அறிவும் கணித அறிவும் போதாமல் இரந்துகொண்டிருக்கின்றார்கள். போதாதற்கு இன்றுள்ள ஆசிரியர்களிடையேயுள்ள ஒழுக்கமின்மை அவ்வப்போது பாடசாலைகளிலும் டியூட்டரிகளிலும் பாலியல் துஸ்பிரயோகங்ளாக பல்லை இளிக்கின்றன.

    இந்த நிலைமையில் தெற்காசியாவிலேயே மிகக்குறைவான வேதனம், விசமாக உயர்ந்துவிட்ட வாழ்க்கைச்செலவு என்பவற்றால் குறைந்த எண்ணிக்கையிலுள்ள தரமான ஆசிரியர்கள் கூட இன்று தமது சேவையில் ஏனோ தானோவென்று அலட்சியமாக இருக்கின்றார்கள்.

    அத்தோடு அன்றாட வாழ்க்கைச்செலவைச் சமாளிக்க சிறுவியாபாரம், ஒப்பந்தக்காரர் வேலைகளிலெல்லாம் இறங்கி, 'லொறி வந்திட்டுதா? சீமெந்து எப்ப வரும்?' என்றெல்லாம் பாடசாலைகளிலே தொலைபேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

    போதாதற்கு அரசாங்கத்தின் தவறான கல்விக்கொள்கைகள், கல்வி அதிகாரிகளின் ஆசிரியர்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கைகள் என்று அவர்களை மேலும் சீரழித்துக்கொண்டிருக்கின்றது.

    இதுதான் இன்றைய யதார்த்தம்

    ReplyDelete
  2. Jessly.

    fantastic!!! bravo!!! but its not enough, give them more and more spicy words for the new teachers (not all) but everyone of us respecting teachers.

    ReplyDelete

Powered by Blogger.