கண்டி பிரிட்டிஷ் கவுன்சிலை முற்றுகையிட்ட பொதுபல சேனா (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
பொசன் போயாதினத்தில் பிரிடிஸ்கவுன்ஸில் நிறுவனம் நடத்தவிருந்த ஒரு பரீட்சை விடயமாக பொதுபல சேனாவின் ஒரு குழு கண்டியிலுள்ள பிரிடிஸ் கவுன்ஸில் நிறுவனத்தை முற்றுகையிட்டது.
பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பபாளர் மடவல ஜினமங்களாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் தலைமையில் கண்டி கொடுகொடெல்ல வீதியில் உள்ள என்.எஸ்.பி.கட்டிடத்தில் உள்ள பிரிடிஸ்கவுன்சில் நிறுவனத்திற்கு ஒரு குழு பிரவேசித்தது. பத்திரிகையாளர்களும் முன் கூட்டியே அழைக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானிய கவுன்சில் வாசிகசாலையில் உள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த நிர்வாகியிடம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
பௌத்தமதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புனித தினமான எதிர்வரும் 23ம் திகதி பொசன் போயாதினத்தில் 7 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கான 'யங்லேனர்ஸ்' என்ற ஆங்கில மொழிப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பௌத்த சிறுவர்கள் அன்று பௌத்தமத அனுஷ்டானங்களை கைவிட வேண்டும் என்பதற்காகவா இதைச் செய்தீர்கள்?
நாடு முழுவதில் இருந்தும் எனக்கு பெற்றோர்கள் தொலைபேசி மூலம் இது பற்றித் தெரிவித்தனர். நாடுமுழுவதும் 1500 சிறுவர்கள் இந்தப் பரீட்சைக்கு தோற்றும் போது சுமார் 500 பேர் அளவில் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கமுடியும். எமது ஆயிரம் சிறுவர்களுடைய பௌத்த அனுஷ்டாடானம் தடைப் படுகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். முக்கியமாக அனுராதபுரம் என்பது பொசன் தினத்தில் மிக முக்கிய இடத்தை வகிப்பது. இருப்பினும் அனுராதபுர மாணவர்களையும் இதில் ஈடுபடவைத்துள்ளது பாரதூரமான தவறு. முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை பள்ளி செல்ல அரச ஊழியர்களுக்கு இரண்டு மணி நேர விடுமுறை வழங்கப்படுகிறது. ஜூம்மா நேரத்தில் பரீட்சைகள் நடப்பதில்லை. அத்தகைய உரிமை கூட பௌத்த மதத்தினருக்கு இல்லையா? இந்த நாடு பௌத்த நாடு. பௌத்தமதத்தின் பாதுகாவலர்கள் என்ற வகையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எமது பொறுப்பு என்றார்.
இதையடுத்து மேற்படி விடயத்திற்குப் பெறுப்பான பெண் அதிகாரி ஒருவர் இடையில் தலையிட்டு பின்வருமாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வேறு தினங்களில் இப்பரீட்சை நடை பெறுகிறது. இதற்கான அனுசரணையை மட்டுமே பிரித்தானிய கவுன்சில் வழங்குகிறது. பாடம் நடத்துவது, பரீட்சை நடத்துவதை திட்டமிடுவது, திகதி நிர்ணயிப்பது இவை அனைத்தும் இதனை மேற்கொள்கின்ற டியுசன் மாஸ்டர்களைப் பொறுத்தது. இது ஒரு டியுசன் வகுப்பு. அதற்கான பரீட்சைக்கான அனுசரணையை மட்டுமே நாம் வழங்கியுள்ளோம். இது தவிர எமக்கு எதுவும் தெரியாது என்றார். இது நாடளாவிய ரீதியில் பொசன் தினத்தில் நடத்த திட்டமிடப்படவில்லை. அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு டியுசன் வகுப்பைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களே பரீட்சை எழுத உள்ளனர். அதற்குப் பொறுப்பானவர் எமது அதிகாரியல்ல. இது பற்றி அவரிடம் கதைக்கும் படி தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
உயர்தொனியில் தமது நிலைப்பாட்டை நியங்கொட சாசனரத்ன தேரர் தெரிவித்தார். பின்னர் நடந்த ஊடக சந்திப்பில் வேறு ஒரு தினத்தில் அப் பரீட்சையை நடத்துவதாக சம்பந்தப்பட்ட அனுராதபுர டியுசன் ஆசிரியர் இணக்கம் தெரிவித்ததாக தேரர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தை அடுத்து பெருமளவு பொலீஸார் அங்கு விரைந்த போதும் யாவும் சுமூகமாக முடிவுற்று யாவரும் களைந்து சென்றனர்.
Alas! BBS, religious observances on Posson day and other specials days would be observed. Good deeds to mark special days welcome. Inviting the misguided youngsters to the truth and aligning them on the right track is vitally important in order for a country to prosper. Similarly, each and every individual of all communities regardless of position and ranks should play their part for a peaceful atmosphere in the country making use of such days.
ReplyDeleteAbove all, interestingly, Yellow Robed monks must and be an exemplary group to set examples to all in light of lord Buddha’s teachings.
Committing suicide by self immolation, on a very special day, like Vesak day , is much more serious than sitting exams on a Posson day. Additionally, It’s a curse on all good Sri Lankans to see these days that hard-core religious denominations judging other communities, Business Institutions, Educational Institutions local and international through their coloured glass. This is not good enough for a multi ethnic country.
On a final note, there is so many most crucial areas within BBS itself up for raids before attention is turned elsewhere. “Mother crab tells juvenile to walk straight not realising mother too, walking crookedly “
இதில் என்ன வேடிக்கை தெரியுமா ? ஊடகவியளார்கள் அனைவரும் ஏற்கனவே அங்கு உள்ளனர் ஆனால் போலீஸ் வரும் பொது எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டதாம். எப்படி எங்கட போலீஸ் சேவை சூப்பர்
ReplyDeleteஎன்ன இவனுகள் எதற்கு எடுத்தாலும் முஸ்லிம்களை சாப்பாட்டுக்கு தொட்டுகொள்ளும் ஊறுகாய் போல எல்லாத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் சம்பந்தபடுதுகின்றான் ?
முதலில் இவனுகள் எல்லாருக்கும் கலியாணம் கட்ட சொல்லி நாட்டில் சட்டம் கொண்டுவரவேண்டும் அப்பதான் இந்த மாதிரி ஊர்பாலாய் தேடாமல் வயித்து பசிக்கு எங்காவது பிழைப்பு நடத்த போவனுகள்.
இவனுகள் இருக்கும் வரைக்கும் முஸ்லீம்கள் நிம்மதி அவ்வளவுதான் !!!!!!!!!!!!!!!
neengal unmaiyil uththiyohapoorwam illaza (Rowdi) police thaan.
ReplyDelete