இன ரீதியான பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முற்றுப்புள்ளி - கல்வியமைச்சர்
தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எந்த அரசாங்கப் பாடசாலையிலும் தற்போது இன, ரீதியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என உறுதியாகத் தெரிவித்த அவர், இனி இன ரீதியாக பாடசாலைகள் உருவாக் கப்படுவது நிறுத்தப்படுவது டன் சகல பாடசாலைகளி லும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். tn
கௌரவ அமைச்சர் அவர்களே! இது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விடயம். வேறு வகையில் சொன்னால் மற்ற இனங்களை கல்வியில் ஓரம் கட்டுவதற்கு எடுக்கப்படும் சூழ்ச்சி என்று சொல்லலாம். மர்ஹூம் அஷ்ரப் இன் காலத்தில் ஆனந்த கல்லூரியில் கொழும்பில் வாழும் முஸ்லிம்களுக்கு இருபது வீதம் முஸ்லிம் மாணவர் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு முழு இலங்கையுமே எதிர்த்து அவருக்கி மரண அச்சுருத்தலும் விடப்பட்டது. ஏன் நீங்கள் கூட அவரை பலமுறை கண்டித்தது உரையாற்றி இருக்கிறீர்கள். 1956க்கு பின் இன ரீதியான நியமனகளும் பாடசாலைகளும் தோன்றி இருக்கா விட்டால் எங்கள் முஸ்லிம் சமூகம் மாடு மேய்க்கவும் விவசாயம் செய்யவும் பெட்டி வியாபாரம் செய்யவும் தான் முடிந்திருக்கும். இன்று கல்முனை சாஹிராவில் படித்த மாணவர்கள் தான் கொழும்பில் டாக்டர்களாகவும் பொறியலாளர்களாகவும் கணக்காளர்கலாகவும் நூற்றுக்கணக்கில் கொழும்பில் கடமை ஆற்றுகிறார்கள்.. இந்த நிலைமையை மாற்றுவதற்கு நீங்கள் வேறு ஒரு மதி நுட்பத்தை அறிமுக படுத்த போகிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள் அமைச்சரே...
ReplyDeleteஅதை இனவெறியர்கள் இருக்கின்றார்களே அவர்களிடம் சொல்லுங்கள். கல்வி விடயத்திலும் விட்டுவைக்கவில்லை அவர்களின் துவேசத்தை...
ReplyDeleteHi Friends,
ReplyDeleteபேரினவாதிகளின் அகராதி தனித்துவமானது. அந்த அகராதியில் இனவாதம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.
(உ-ம்):
1.சிங்கள பௌத்தர்கள் ஒன்று கூடி மற்றொரு இனத்தை திட்டமிட்டு நிந்தித்தால்கூட அது இனவாதம் அல்ல. அதெல்லாம் பொதுவாதம்தான்.
2. ஆனால், சிங்கள பௌத்தர்கள் தவிர வேறு இனத்தவர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி எது செய்தாலும் அது இனவாதம்.
3. (தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் பிரதேசத்தில்கூட) சிங்கள மொழியில் மட்டுமே அலுவல்கள், அறிவுறுத்தல்கள், விண்ணப்பங்கள், தேசியகீதம் உட்பட இதர விடயங்கள் இடம்பெற்றால் அது பொதுவாதம்.
4. ஆனால் தமிழ் மொழியிலே (3) ல் மேற்கூறப்பட்டவைகள் (தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் பிரதேசத்திலேனும்கூட) இடம்பெற்றால் அது இனவாதம்.
How's that?