ரவூப் ஹக்கீமின் பெரிய ஏமாற்றமும், ஹசன் அலியின் சிறிய நம்பிக்கையும்
இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தமிழோசையிடம் தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி அவர்கள், சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.
அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார். bbc
இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்களில் முக்கியமானதே இந்த 13 வது திருத்தச் சட்டம் தொடர்பானதாகும்.
ReplyDeleteஇவ்விடத்தில்,
மாகாண சபையின் அதிகாரம் குறைக்கப்படுகின்ற "திவினெகும" சட்டத்திற்கு எந்த நிபந்தனைகளை முன்வைத்து ஆதரவு கொடுத்தீர்கள் ?
அதுபோலவே, முஸ்லிம்கள் தொடர்பில் தாங்கள் எவ்வாறான நிபத்தனைகளை முன்வைத்து 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தீகள் ?
தற்போதைய கிழக்கு மாகாண சபையை அரசுடன் இணைந்து அமைக்கும் போது கூட முஸ்லிம்களின் உரிமை, அபிலாசை தொடர்பில் தாங்கள் எவ்வாறான நிபத்தனைகளை முன்வைத்தீர்கள் ?
என்பதை இப்போதாவது ஊடகங்கள் வாயிலாக சொல்வீர்களா ?
முஸ்லிம்களின் உரிமை, அபிலாசை தொடர்பில் மொத்த வியாபாரம் நடைபெறுகிறதோ !!!
வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைவதற்கான வாய்ப்புக்கள் ஒருபோதும் எந்த திருத்தச் சட்டத்திலும் (எச்சரத்திலும்) இருத்தல் கூடாது. அது 13ஆவது திருத்தச் சட்டமாக இருந்தாலும் சரி 19 ஆவது திருத்தச் சட்டமாக இருந்தாலும் சரி.
அவ்வாறு வடமாகாணமும், கிழக்குமாகாணமும் என்றாவது எப்போதாவது இணைவதற்கான வாய்ப்பு (13 ம் திருத்தச் சட்டத்தில்) இருக்குமாயின் அங்கு - அதாவது வட-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான (தென்கிழக்கு) அதிகார அலகு ஒன்று கிடைக்க வேண்டும். அது ஒருபோதும் சாத்தியம் இல்லை.
எனவே, அவ்வப்போது அரசிடம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஊடகங்கள் வாயிலாக சொல்லுங்கள்.
எப்படியோ.. மஹிந்த அரசாங்கத்தில் ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு எல்லாவற்றிலுமே இரண்டாம் நிலைதான்! அங்கு ரிசாத்தும், அதாவும் இருக்கும் வரையில் ஹக்கீமால் முன்னிலைக்கு வரவே முடியாது என்பது தெளிவாகின்றது.
ReplyDeleteஇரண்டாம் கட்ட அறிவிப்பில் இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னராவது தெரிவுக்குழுவின் அறிக்கை குப்பையில் வீசப்படும் வகையில் அமையுமா? அல்லது கோதபுரத்தில் வைத்து பேணிப் பாதுகாக்கக்கூடியவாறு அமையுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-