Header Ads



சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதிகளில் இவ்வாரம் பிரபல்ய உலமாக்களின் ஜும்ஆ பயான்

வாமி நிறுவனத்தின் அனுசரனையில்; 14.06.2013 வெள்ளிக்கிழமை இலங்கையில் பிரபல்யம் வாய்ந்த விசேட உலமாக்களால் குத்பா மற்றும் பல நிகழ்ச்சிகளை சாய்ந்தமருது -மாளிகைக்காடு பிரதேசங்களில்; நடாத்துவதற்கு சாய்ந்தமருது -மாளிகைக்காடு உலமா சபை ஏற்பாடு செய்துள்ளது. 

அந்த வகையில் கொழும்பு நகர ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் யூசுப் முப்தி அவர்களால் சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவசலிலும், ஜாமியா நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர அஷ் ஷெய்க் அப்பாஸ் நளீமி அவர்களால் மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜூம்மா பள்ளிவசலிலும், பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் அக்ரம் நளீமி அவர்களால் மாளிகைக்காடு அந்நூர் ஜூம்மா பள்ளிவசலிலும,; உண்மை உதயம் இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியர் அஷ் ஷெய்க் இஸ்மயில் ஸலபி அவர்களால் சாய்ந்தமருது அல் இஸ்லாஹ் ஜூம்மா பள்ளிவசலிலும் குத்பா பிரசங்ககள் நிகழ்த்தப்பட உள்ளன.

அத்துடன் அஸர் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவசலில்; அஷ் ஷெய்க் யூசுப் முப்தி அவர்களாலும் ஜாமியா நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கல்வித்துறை பீடாதிபதியுமான அஷ் ஷெய்க் ஊ. அய்யூப் அலி நளீமி அவர்களாலும் விசேட மார்க்கச் சொற்பொழிவுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளி வாசலில் ஹாதியா அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ் ஷெய்க் அக்ரம் நளீமி அவர்களாலும், ஸாலிஹீன் ஜூம்மா பள்ளிவசலில் அஷ் ஷெய்க் அக்ரம் நளீமி அவர்களாலும், மஸ்ஜிதுல் ஹாதி பள்ளி வாசலில் அஷ் ஷெய்க் இஸ்மயில் ஸலபி அவர்களாலும், சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் பாடசாலையில் அஷ் ஷெய்க் அப்பாஸ் நளீமி அவர்களாலும் பெண்களுக்கான விசேட மார்க்கச் சொற்பொழிவுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது -மாளிகைக்காடு பிரதேசங்களில்; வீடு வீடாகச் சென்று வினியோகிப்பதற்கு என வாமி நிறுவனத்தின் அனுசரனையில் இஸ்லாமிய குடும்ப வாழ்வு, அதனை கேள்விக்குள்ளாக்கும் சீதனம், அதற்கான தீர்வாக வரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப்பமுத்துவதன் அவசியம் என்பவற்றை விளக்கும் 5000 புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.    

எனவே இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

தலைவர்,
உலமா சபை - சாய்ந்தமருது – மாளிகைக்காடு

No comments

Powered by Blogger.