கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானத்துடன் பறவை மோதியது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது.
இந்த விபத்தினால் விமானத்திற்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரான போது சுமார் 50 மீற்றர் உயரத்தில் பறவை விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளது
விமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல்சிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நாட்டுமக்களின் மனம்வேதனைப்பட்டவண்ணம் உள்ள காரணத்தால் நாட்டின் தலைவரின் அனீதிச்செயல்களால் அவர்மீது இறைவனின் சாபமோ தெரியவில்லை. ஏற்கனவே இஸ்லாமிய சரித்திரங்களில் உள்ள நிகழ்வுகள் போல இறைவன் காட்டுவதுபோல எண்ணத்தோணுகின்றது.
ReplyDelete