இந்த மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது யார்..?
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்லவக்குளம் மற்றும் வடலிக்குளம் ஆகிய இரு கிராமங்களும் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்ட கிராமமாகும்.
பல்லவக்குளம் எனும் கிராமத்தில் 206 சுனாமி வீட்டுத்திட்டமும், வடலிக்குளத்தில் 212 வீட்டுத்திட்டும் அமைக்கப்பட்டுள்ளது. பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் பட்சத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது பல உயிர்ளை பழிகொடுத்து தற்போது கவலையில் உள்ள போதும் கவலைக்கு மேல் கவலையாக இன்று பாரிய பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அன்றாட தேவைகளில் ஒன்றான குடி நீர் பிரச்சனை அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டதையும் விட்டுச்செல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
குச்சவெளி பிரதேசத்த்திலுள்ள வசதி படைத்தவர்கள் குடி நீர் வியாபாரத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு லீட்டர் தண்ணீரின் விலை ஒரு ரூபாய் ஆகும். பணம் கையில் இருப்பவர்கள் குடிநீரை வாங்குவதில் அக்கறை காட்டி வருவதுடன், ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் குடி தண்ணீரைப்பெற முடியாத நிலையில் உவர்நீரை பாவித்து வருவதாகவும் அதனை பாவிப்பதினால் சிறு நீரகப்பிரச்சனை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லவக்குளம், வடலிக்குளம் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனை குறித்து விபரங்களை சேகரிப்பதற்காக அக்கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
பல்லவக்குளம் பாடசாலை மாணவர்கள் குடி தண்ணீர் இன்றி பாடசாலை அருகிலுள்ள தனவந்தரின் வீட்டிலுள்ள பாத்திரத்தில் கம்பு போட்டு மற்றய மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஏந்திய வண்ணம் வருவதை நேரடியாக அவதானித்தேன். குடிநீரின் அருமை அப்போது தான் எனக்கு விளங்கியது.
அதனையடுத்து பல்லவக்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.ஹஸன் பாவா என்பவருடன் உரையாடியபோது நான் குச்சவெளி ஐhயா நகரில் வசித்து வந்தேன். சுனாமி அனர்த்தத்தின் போது வீடு வாசலை இழந்து பின்னர் அரசாங்கத்தின் உதவியுடன் பல்லவக்குளத்தில் வீடு வழங்கப்பட்டது. எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அரசு வீட்டுத்திட்டத்தை வழங்கியும் அத்தியவசிய தேவையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து தரவில்லை. கிராமத்தில் கிணறுகள் காணப்படுகின்றது.ஆனால் உவர்நீராக உள்ளது. நான் கடற்றொழிலாலியாக இருந்தபோதிலும் தற்போது காற்று அதிகம் வீசப்படுவதால் கடலுக்கு செல்வதில்லை. ஒரு நேரத்திற்கு சாப்பிடக்கூட கஸ்டமான நிலையில் இருக்கும் போது குடி தண்ணீரைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.
ஒரு லீட்டர் தண்ணீரின் விலை ஒரு ரூபாய் ஆகும் இருந்தபோதிலும் இவர்களால் வழங்கப்படும் நீர் சுத்தமானதா என தெரியாது. எனவே குடிநீர் பிரச்சனையை தீர்த்து தருமாறு அதிகாரிகளை வேண்டுகின்றேன் என்றார்.
அத்துடன் ஏ.எச்.ஹலிமத்தும்மா இவ்வாறு கூறினார் என்ட காலில் வாத நோய் இருந்தும் வீட்டுப்புலக்கத்திக்காக எனது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் து_ரத்திலுள்ள உவர்நீர் குறைந்த கிணற்றை நோக்கி சென்று தான் வீட்டுப்பாவனைக்கு தண்ணீர் எடுத்து வருகின்றேன். குடிப்பதற்கு ஒரு பெரல் தண்ணீர் 150 ரூபாய் கொடுத்து எடுக்கின்றேன். எனக்கு சமூக சேவைகள் திணைக்களத்தினால் பிச்சி சம்பளம் 150 தாராங்க மாதம்.இருந்தும் குடி தண்ணீருக்காக வேண்டி அந்த பணத்தை பயன்படுத்துகின்றேன். எனக்கு செலவுக்கு கூட இல்லாத கட்டத்தில் குடிக்கும் தண்ணீ முக்கியம் என்ற படியால் பணம் கொடுத்து வாங்குகிறேன். அரசாங்கம் தண்ணீருக்கும் காசி தந்தா நல்லமெனவும் குடிதண்ணீர் பிரச்சனையை அவசரமாக தீர்த்து வைக்க வேண்டுமெனவும்; தெரிவித்தார்.
அதனையடுத்து கே.உவைஸ் தெரிவிக்கையில் 2005ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இக்கிராமத்தில் வாழ்ந்து வருவதுடன், குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருவதாகவும் பல கஸ்ட துன்பங்களுக்கு மத்தியில் குடும்ப ஐPவியத்தை கழிக்கும் பட்சத்தில் குடிநீரையாவது பெற்றுத்தருவதற்கு யாரும் முயற்சிப்பதில்லை. பொருளாதார கஸ்ட நிலைமைக்கு மத்தியில் பிள்ளைகளை படிப்பிப்பதற்கு பின்னேர வகுப்புக்கும் காசி கொடுக்க வேண்டும் வீட்டுச்செலவையும் பார்க்க வேண்டும். நியாயம் படைத்த அரசியல் வாதிகளாவது கஸ்ட நிலையை நேரில் வந்து பார்த்து விட்டு எங்களுடைய குடிநீர் பிரச்சனையையாவது தீர்த்து தருவார்களா? என எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன்.
எனவே குடிநீர் பிரச்சனை விடயத்தில் அனைவரும் ஒன்றினைந்து எங்களுடைய தாகத்தை தீர்க்க மாட்டிர்களா? எனவும் கேள்வியாக கேட்கின்றனர்.
அரசாங்கம் உதவினாலும், உதவாவிட்டாலும் வெளிநாட்டு தனவந்தர்களிடமிருந்து பணங்களைப் பெற்று பல்வேறு பகுதிகளில் பள்ளி வாசல்கள் கட்டும், உதவிகள் வழங்கும் ஜம்இய்யாக்கள் அல்லது எமது நாட்டிலே இருக்கும் வசதிபடைத்தவர்கள் இவர்கள் விடயத்தில் கண் திறப்பார்களா? இப்பணி மரணித்த பின்பும் துண்டிக்காத நண்மையைப் பெற்றுத் தரும் ஸதகதுன் ஜாரியா.
ReplyDeleteநம் நாட்டில் ஒருபுறத்தில் இதுபோன்ற கஸ்ட நிலை இருந்து வந்துள்ளது சகோதரர் அப்துல் சலாம் யாசின் மூலமாக நம் அனைவரின் கவனத்திற்கும் இப்பிரச்சினை கொண்டுவரப்பட்டுள்ளது. இன்ஸா அல்லாஹ் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவாலும் அசமந்தப்போக்காலும்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. ஒரு மாதம் பிச்சைச்சம்பளம் ரூ. 150 ஆச்சரியமாகவுள்ளது இந்தத்தொகை ஒரு தரம் தேனிர் அருந்துவதற்கும் போதாது..
ReplyDelete