Header Ads



குர்ஆனிய வசனங்கள் தாய்லாந்து விஞ்ஞானியில் ஏற்படுத்திய மாற்றம்..!

டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr. Tagatat Tejasen): 

(எம்.ஏ.ஜி.எம் முஹஸ்ஸின்)

இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். 

அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் அளித்தோம். அப்போது அவர் தங்களது புத்த சமய புத்தகங்களில் கரு வளர்ச்சி நிலைகள் பற்றிய சரியான விவரங்கள் உள்ளன என கருத்து தெரிவித்தார். நாங்கள் அந்த புத்தகங்கில் உள்ள விவரங்களை அறிய மிக ஆவலாய் உள்ளோம் எனவும் அந்த புத்தகங்களைப் பற்ற அறிய விரும்புவதாகவும் கூறினோம்.

ஒரு வருடம் கழிந்து பேராசிரியர் டிஜாஸன் “மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு” தேர்வாளராக வந்தார். நாங்கள் அவர் கடந்த வருடம் கூறியதை நினைவு கூர்ந்தோம். அந்த கூற்றை தான் உறுதிபடுத்தாமல் கூறி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் புத்த சமய புத்தகங்களை ஆராய்ந்த போது அவைகளில் இது சம்பந்தமான ஒரு விவரமும் இல்லை என்பதை அறிந்தார். இதன் பின் பேராசிரியர் கீத் மூரே எழுதிய ‘தற்கால கருவியல் சம்பந்தமான கருத்துக்கள் எப்படி குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள கருத்துக்களுடன் ஒத்து வருகின்றது” என்ற உரையைக் கொடுத்தோம். அவரிடம் கீத் மூரே பற்றிக் கேட்டோம். அவரைப் பற்றித் தெரியும் என்றும் அவர்; ‘கருவியல் துறையில்” உலக பிரசித்து விஞ்ஞானி என்றும் கூறினார். பேராசிரியர் டிஜாஸன் இந்த விவரங்ளைப் (மூரேயின் கருத்துக்கள்) படித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.

நாங்கள் அவரது சிறப்புத் துறையிலே பல கேள்விகளைக் கேட்டோம். அதில் ஒன்று தான் இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான “தோலின் உணர்ச்சிகள்” பற்றியதாகும். டாக்டர் டிஜாஸன் ‘ஆம்- தோல் ஆழமாக எரிக்கப் பட்டால் (உணர்ச்சிகள் பாதிக்கும்)” என்றார். அவரிடம் சொல்லப்பட்டது- ‘நீங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி கூறிய இந்த புத்தகத்தை – புனித நூலை – குர்ஆனை அறிய விரும்புகிறீர்கள?;” இறை நிராகரிப்போர்களை நரக நெருப்பால் தண்டனை கொடுப்பதைப் பற்றிக் கூறும் போது அவர்களது தோல் அழிந்த பின் திரும்ப அவர்களுக்கு புதிய தோலை உருவாக்கி அவர்களுக்கு நரக வேதனையை அனுபவிக்கச் செய்யப்படும் என்று கூறுவதன் மூலம் உணர்ச்சிகளின் நரம்புகள் தோளில் தான் முடிவடைகின்றன 

என்னும்உண்மை விளங்குகிறது. குர்ஆனின் வசனங்களைப் பாருங்கள்:

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ- அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை- அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென- அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:56)

நாம் அவரிடம் கேட்டோம்: ’1400 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ச்சிகளின் நரம்புகள் தோலில் முடிவடைகின்றன என்பதற்கு இது ஆதாரம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ ‘ஆம் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் டாக்டர் டிஜாஸன் உணர்ச்சிகள் பற்றிய இந்த உண்மை நீண்ட காலத்திற்கே முன்பே தெரிந்ததாகும். காரணம் யாராவது ஒருவர் எதாவது தவறு செய்தால் அவர் தோலைச் சுடுவதன் மூலம் தண்டிக்கப்படும். அதன் பின் அல்லாஹ் அவருக்கு பதிய தோலை போர்த்தி வேதனையை அனுபவிக்கச் செய்வான். அதாவது பல்லாண்டுகளுக்கு முன்பே வேதனையை உணரக்கூடியவைகள் தோலில் தான் உள்ளன என்பதை அறிந்துள்ளார்கள். 

எனவே தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது. தோல் தான் உணர்ச்சிகளின் மையம். நெருப்பால் முழுமையாக தோல் எரியும் போது- அது அதனுடைய உணர்ச்சிகளை இழந்து விடுகின்றது. அதன் காரணமாகத் தான் மறுமையில் அல்லாஹ் தோலை மாற்றிக் கொண்டே இருப்பான் குர்ஆன் 4:56ல் உள்ளது போல். நாம் அவரிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டோம். 

‘இவை முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர்களின் மூலமாக வந்திருக்க வாய்ப்புள்ளதா? பேராசிரியர் டிஜாஸன் இது ஒரு காலத்திலும் மனிதர்களின் மூலம் வந்திருக்க சாத்தியம் இல்லை என்று மறுத்தார். ஆனால் இந்த அறிவின் காரணியைப் பற்றியும் முகம்மது எங்கிருந்து இதனைப் பெற்றிருக்க வாய்ப்பள்ளது? என்றும் கேட்டார். ‘மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள அல்லாஹ்விடம் இருந்த’ என்று நாம் கூறினோம். அதன்பின் அவர் ‘அப்படி என்றால் யார் அந்த அல்லாஹ’” என்று கேட்டார்.

o அவன் தான் இருப்பவைகள் அனைத்தையும் படைத்தவன் ஆகும். 

o நீங்கள் ஒரு அறிவைக் கண்டால்- அது மிக்க அறிவுடையோனிடமிருந்து மட்டும் தான் வந்திருக்க முடியும். 

o இந்த அண்டங்களின் படைப்புகளில் அறிவைக் கண்டால்- அனைத்து அறிவுடையோனால் தான் இந்த அண்டங்கள் படைக்கபட்டதால் ஆகும். 

o இந்த படைப்புகளில் ஒரு முழுமையைக் கண்டால் இவையனைத்தையும் மிக அறிவான்மையுள்ள ஒருவனால் தான் படைக்கபட்டுள்ளது என்பதற்கு ஓர் ஆதாரமாகும். 

o கருணையைக் கண்டால் கருணைமிக்க வல்லோனின் படைப்பு என்பற்கு சாட்சியாக ஆகும். 

o இதே போல் படைப்புகள் அனைத்தும் ஒரு முறைப்படியாகவும்- ஒழுங்காகவும் அமையப் பெற்றதைக் கண்டால் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள ஒரே இறைவனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.

பேராசிரியர் டிஜாஸன் நாம் கூறிவைகளை ஏற்றுக் கொண்டார். அவர் தம் நாடு திரும்பி இந்த புதிய ஞானத்தையும்- கண்டுபிடிப்புகளைப் பற்றிய பல விரிவுரைகள் நிகழ்த்தினார். இந்த விரிவுரைகளின் பயனாக அவரது மானவர்களில் ஐந்து பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நாம் அறிந்தோம். 

பின் ரியாத்தில் நடந்த எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில் குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள மருத்துவ அறிவியல் பற்றிய விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்கேற்றார். பேராசிரியர் டிஜாஸன் நான்கு நாட்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத பல அறிஞர்களிடம் குர்ஆன்- ஹதீஸ்களில் உள்ள இந்த உண்மைகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பதில் கழித்தார். 

அந்த மாநாட்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியர் எழுந்து பேசலானார்: ‘கடந்த மூன்றாண்டுகளாக ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தானி அவர்களால் தரப்பட்ட குர்ஆனில் நான் ஈடுபாடலானேன். கடந்த வருடம் நான் பேராசிரியர் கீத் மூரே அவர்களின் புதிய ஆய்வுகளை ஷேக் மூலம் பெற்றேன். அவர்கள் இதனை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்து தாய்லாந்து முஸ்லிம்களிடையே உரையாற்றக் கூறினார்கள். அவர்களது வேண்டுகோளை நான் நிரைவேற்றினேன். நான் ஷேக்கிடம் கொடுத்த வீடியோ கேசட்டில் நீங்கள் அதனைப் பார்க்கலாம். இந்த மாநாட்டு மூலமும் எனது ஆராய்ச்சிகளினாலும் நான் நம்புவது என்னவென்றால்- 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனிலே பதியப்பட்டுள்ளது அனைத்துமே உண்மை என்பதையும் அவைகளை அறிவியல் மூலம் நிருபிக்கலாம் என்பதாகும்.

படைப்பதற்கு தகுதியான இறைவன் மூலம் பெற்ற இந்தச் செய்தியை தெரிவித்த முஹம்மது நபி அவர்கள் படிக்கவோ- எழுதவோ தெரியாதவர். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். எனவே நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்..” அதாவது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை- ‘முஹம்மது ரசூலுல்லாஹ்” முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவரார்கள்” என்பதை கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கிறேன். நான் இந்த மாநாட்டின் மூலம் அறிவியல் உண்மைகளi மட்டுமல்லாது மேலும் பல அறிஞர்களிடையே கலந்துரையாடி பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்ததன் மூலம் நான் அடைந்த மதிப்பிட முடியாத ஒரு பலன் என்னவென்றால் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ்” என்னும் கலிமாவைக் கூறி நான் ஒரு முஸ்லிமானதுதான்.

எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ- அவர்கள் உமக்கு உம்முடைய -இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும்- அது வல்லமை மிக்க- புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள். (அல்குர்ஆன்: 34:6) 

2 comments:

  1. Glorified is
    Allah and praised is he. Glorified is Allah the most great.

    ReplyDelete

Powered by Blogger.