பலஸ்தீன புதிய பிரதமராக ரமி ஹம்தல்லா நியமனம்
பாலஸ்தீனத்தின் புதிய பிரதமராக, ரமி ஹம்தல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீன பிரதமராக இருந்த சலாம் பயத்தின் பதவி காலம் முடிந்ததால் அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக, ரமி ஹம்தல்லாவை, அதிபர் அப்பாஸ் நியமித்துள்ளார். மேற்கு கரையின் நேப்ளஸ் நகரில் உள்ள அல்-நஜா பல்கலைகழகத்தின் தலைவராக ரமி ஹம்தல்லா உள்ளார். இவர் பிரிட்டனில் படித்தவர். புதிய பிரதமராக ரமி நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வரவேற்றுள்ளார். ""ரமி நியமனத்தின் மூலம், இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தை சுமுகமாகும்,'' என, கெர்ரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Post a Comment