இஸ்ரேல் - சிரியா எல்லையில் கடும் மோதல்
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு உச்சக்கட்ட போரில் போராளிகள் வசமிருந்த பகுதிகளை அதிபர் படையினர் மீட்டு வருகின்றனர். சிரியாவின் மேற்கு பகுதியில் போராளிகளிடம் இருந்த குசைர் நகரை லெபனான் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் துணையுடன் அதிபர் படையினர் மீட்டுள்ளனர்.
சமீபத்தில், ஐ.நா. ராணுவத்தினரின் கண்காணிப்பில் இருந்த கோலன் ஹைட்ஸ் பகுதிகளை போராளிகள் கைப்பற்றினர். இந்நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக போராளிகள் மற்றும் ராணுவத்தினரிடையே கடும் சண்டை நடந்தது.
இந்த கடும் சண்டைக்கு பிறகு, சிரியா ராணுவத்தினர் அப்பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரியாவும் இந்த கோலன் ஹைட்ஸ் பகுதியில் பணியாற்றிய தனது ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Post a Comment