தலிபான்களின் மிரட்டல்களுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம்
பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. மலைப்பகுதியான கைபர்பக்துன்கவா மாகாணத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து குணமடைந்து வரும் இம்ரான்கான் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலிபான்களிடம் இருந்து எங்களுக்கு பெரிய அளவில் மிரட்டல்கள் வருகின்றன. இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். எங்கள் கட்சி ஆளும் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாணியில் ஆட்சி நடத்தும் படி அறிவுறுத்தியுள்ளேன். நிதிஷ்குமாரை போன்று ஒளிவு மறைவற்ற நிர்வாகம் செயல்திறன், சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன்.
ஆயுதம் ஏந்தி போராடி வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நான் கூறினேன். எனவே என்னை தலிபான் கான் என அழைக்கின்றனர். ஆனால் இன்று பிரதமரும் அதைதான் விரும்புகிறார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற என்னை பார்க்க வந்த நவாஸ் செரீப்பிடம் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல் மூலமோ, ராணுவத்தின் மூலமோ தலிபான்களின் மிரட்டலுக்கு தீர்வு காண முடியாது.
தலிபான்களுடன் மத்திய அரசின் பேச்சுவார்த்தை மூலமே மலைவாழ் மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வழி வகை செய்ய முடியும் என்றேன். இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்பும் நவாஸ் செரீப்பின் கருத்தை ஆதரிக்கிறேன். இந்தியாவுடன் ஆன நல்லுறவை வளர்க்கவும், அமைதியை நிலை நாட்டவும் இதுவே நல்ல தருணம். மும்பை குண்டு வெடிப்பு வழக்கை துரிதப்படுத்தி இந்தியாவுடன் ஆன பொருளாதார உறவை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hi Friends,
ReplyDeleteபுலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய நமது தலைவர்களுக்கு நிகழ்ந்த விளைவுகள்தான் இம்ரானுக்கும் நிகழும் வாய்ப்புள்ளது.
சர்வதேச வர்த்தமானங்களை அனுசரிக்காது தமது அடிப்படைவாத நோக்கங்களைச் செயற்படுத்துவதிலேயே தீவிரமான போக்குடையவர்கள் தாலிபன்கள்.
மிதவாத சிந்தனையுள்ள அரசியல்வாதி இம்ரான்.
அவர் எவ்வளவுதான் தனது அரசியல் இருப்புக்காக தாலிபன்களின் தீவிரவாதத்தை ஆதரிப்பதுபோல காண்பித்துக்கொண்டாலும் இருதரப்பினரும் எண்ணெயும் தண்ணீருமே.
what is fundamendalism dear sister, if follow Islam atom by atom is that fudamendalism
ReplyDelete